பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் 28. பொன்மணியார் - குறுந்தொகை-ங்கக. 29. மாற் பித்தியார் - புறம்-உடுசு, உடுஉ. 30. முள்ளியூர்ப் பூதி பார் - அகம்-கனங். 31. (3 வண்மணிப் பூதி பார் H குறுக்தொகை-உகூக. என்பாரும் பெண்பாற்புலவ ராவர் என ஊகிக்கப்படுகின்ருர், இனி, நல்லிசைப்புலவருட் பலர், தாம்பாடியருளிய இனிய செய்யுட்களில் ஆங்காங்கு வழங்கிய அரிய சொற்ருெடர்பற்றிப் பெயர்சிறந்துளார். அவர் கல்பொரு சிறுநரையார் (குறுந்தொகை-உகம்), தேய்புரி பழங்கயிற்றினர் (நற்றிணேஉஅச), வில்லக விரலினர் (குறுந்தொகை_ங்எம்) முதலாயோர் பலராவர். அப் பலருள்ளும் பெண்பாற் புலவர் எத்துணையசோ உளராவர் என அறிக. இனி, சைவ வைணவ சமயங்களில் போடியார்களாய்ப் பிற்காலத்து விளங்கிய நல்லிசைப்புலமை மெல்லியலார்கள் காரைக்காற் பேயம்மையாரும், வில்லிபுத்தார்க் கோதையாரும் ஆவர். இவர்கள் கிப்பிய வரலாறுகளைப் பெரிய புராணம், குருபரம்பரை முதலிய அால்களால் தமிழ்மக்கள் நன்கறிவர். இத்துணையுங் கூறியவாற்ருன், வான்ருேய் நல்லிசைச் சான்ருேர் குழிஇய, துங்கச் செந்தமிழ்ச் சங்ககாலத்துக், திதற விளங்கிய முதுணர்வுடைய பெண்பாற் பெருமக்களின் கல்விப்பரப்பு ஒருவாறு உணரப்படும். Printed at the Tamil Kadal' Press, San Thome, Madras.