பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 通

விடர்முகை யடுக்கத்துச் சினைமுதிர் சாத்தம் புகர்முக வேழத்து மருப்பொடு மூன்றும் இருங்கேழ் வயப்புலி வரியதள் குவை இ விருந்திறை நல்கு நாடன் எங்கோன் கழல்தொடி ஆஅய் அண்டிசன் போல வண்மையும் உடையையோ ஞாயிறு : கொன்வினங் குதியால் விசும்பி ஞனே.” என்று, ஆய் புலித்தோலே விரித்து அதில் வேட்டையாற். பெற்ற முள்ளம்பன்றியின் தசை, சந்தனக் குறடு, யானே மருப்பு ஆகிய இவற்றைக்குவித்துப் பரிசிலர்க்குக்கொடுக் கும் கொடைச் சிறப்பையும் வெளிப்படுத்தி, அதனல் அவன் ஞாயிற்று மண்டிலத்தினும் சிறப்புற்று விளங்குக் தன்மையைப் பாராட்டிப் பூவை நிலை பாடினர்.

இங்ங்ணம் ஆயின் அருங்குணத்தில் ஈடுபட்டிருந்த மோசியார், ஒருநாள் பொதியமாமலேக் காட்டின் வழி யாய்ச் சென்று, ஆண்டுக் காணப்படுகின்ற இயற்கை வனப்புக்களில் தமது உள்ளத்தைப் பதித்து வருகின்ற வர், ஆங்கு எண்ணிறந்த யானைகள் கூட்டங்கூட்ட மாய்க் களித்துத் தம்மினங்களோடு வாழ்வதைக் கண் டார். காணலும், மோசியாருக்கு ஆய் புலவர்க்களிக் கும் வரம்பற்ற யானைக் கொடை கினேவிற்கு வந்தது ; வரலும், யானைகளே மிகுதியாகவுடைய இக்காடு இவ் யானைகளேயெல்லாம் ஆய்அண்டிரனது மலேயைப்பாடிப் பரிசிலாகப் பெற்றனவோ!' என்னுங் கருத்துப்பெற,

மழைக்கணஞ் சேக்கும் மாமலைக் கிழவன் வழைப்பூங் கண்ணி வாய்வாள் அண்டிான் குன்றம் பாடின கொல்லோ களிறுமிக வுடைய இக் கவின்பெறு காடே. : என்று தமதுள்ளத்தில் தான்ே சுரக்தெழுந்த கொழுவிய பாடலேக் கூறி, ஆய் காட்டினது யானேச் செல்வ மிகுதி