பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 57

அதனுள் ஐந்து துறைமுகங்களையும் குறித்துள்ளார். இதல்ை, ஆய், இந்த யவனசிரியர் தமிழ்நாடு வந்த காலத் தில் விளங்கியிருந்தவளுதல் பெறப்படும் பெறப்படவே, கம் புலவர் காலம் கி. பி. 150க்கு முன்னென்று கொண்ட கொள்கை வலியுறுதல் காண்க.

இவர் காலத்து வேறு புலவர்கள் : ஆயைப் புறத்திற்பாடிய ஓடை கிழார், குட்டுவன் கீரஞர் அவனேக்குறுக்தொகையிற் பாடிய மோசிகீரனுர், அகத் திற் பாடிய உமட்டுர் கிழார் மகளுர் பாங்கொற்றனர், பரணர் முதலியோர் இவர் காலத்திருந்தவராவர்,

இவராற்பாடப்பட்டோர், சோழன் முடித்தலேக் கோப்பெருகற்கிள்ளி, சேரமான் அந்துவஞ்சேரலிரும் பொறை, ஆய் அண்டிரன் என்போர், ஆய் எயினன்' எனச் சேரன் படைத்தலைவன் ஒருவனுளனகலின், அவனின் இந்த ஆயை வேருக விளங்க வைத்தற்குப் பல்லிடத்தும் புலவர் இவனே ஆய் அண்டிான் எனவே கூறுவர். அண்டிரன் என்னும் பெயர் ஆந்திசன் என்னும் தெலுங்கச் சொல்லின் திரிபு என்பர் சிலர். வேறு சிலர் பிறவாறுங் கூறுப.

பாட்டுக்களின் ஆராய்ச்சி :

புறநானூற்றில் 18, 137, 128, 129, 130, 131, 182, 138, 184, 135, 141, 374, 375 எண்ணமைந்த பதின் மூன்று பாட்டுக்களும் இவரால் பாடப்பெற்றவை. ஏனேத் தொகை நூல்களுள் இவரது பாடல் காணப் படவில்லை. இவருடைய பாடல்களிற்பல, அடி அள விற்குறைந்து, பொருளின் பெருமையில் நிறைந்து, அறிவாழம் மிகுந்து, ஆடிபோலச் சுருங்கிய சொற்களில் அகன்ற பொருள்களே அடக்கிக் காட்டி, அவ்வவ்வமயத்