பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவூர் கிழார் 穹静

எனக்கிள்ளி வளவன் 173-ஆம் புறப்பாட்டில் இவனே வாழ்த்திப் புகழ்வது கொண்டறியலாம். இப்பண்ணன்' தென்னவன் மறவன் என்பது, 888-ஆம் புறப்பாட்டால் அறியப்படுகின்றது. இப்புலவர், மலேயமான் வண்மை யைப் பாராட்டி, அவன் மக்களைப் பாடுதலால், அவனே யும் நன்கறிந்தவராவர்.

பாட்டுக்களின் ஆராய்ச்சி :

இப்புலவர் பாடியனவாகச் சங்கத்தார் தொகுத்த எட்டுத் தொகையுள் புறநானூற்றில் பதினேந்தும், கற் றிணையில் ஒன்றும், குறுந்தொகையில் ஒன்றும், திரு வள்ளுவ மாலையில் ஒன்றுமாகப் பதினெட்டுப் பாட்டுக் கள் கிடைத்திருக்கின்றன.

புறநானூற்றில் 31, 33,38, 41,44, 45, 48, 48,88, ?0, 808, 873, 382, 386, 400 என்ற எண்ணமைந்த பாடல்கள் இவர் பாடியனவாகும். இவர் பாட்டுக்களின் சுவை கயம் அளத்தற்கரிது ஏனைச் சுவைகளினும் கருணைச் சுவையும் வீரச் சுவையும் ததும்பி மிளிர்கின் றன. சோழர் இருவரும் போரொழிந்து ஒற்றுமை உறு தற்குக் கூறிய 44, 45-ஆம் பாட்டுக்கள், கேட்போருள் ளத்தைப் பிணிக்குக் திட்பதுட்பஞ்செறிந்து விளங்கு கின்றன. மலேயமான் மக்களே உய்விக்கப் பாடிய 48-ஆம் பாட்டு, இளஞ்சிருரது இயற்கையைப் புலப் படுத்திப்படிப்போருள்ளத்தைக்கரையச் செய்கின்றது. இளங்தத்தனை உய்விக்கப் பாடிய 47-ஆம் பாட்டில் புல வர்கள் வாழ்க்கை கலத்தையும், அவர்களுடைய இயற் கைக் குணங்களையும் பெருமையையும் வெளிப்படுத்தற்

1. இவன் அகம். 54, 117, !??-ஆம் பாட்டிலும் பாராட்டப்பட்டுளான்.