பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி மறந்தவர் III

ஆனால் எப்பொருளையும் தெரிந்து வாழ்க்கையின் பரந் துபட்ட அனுபவத்தால் முக்காலங்களையும் முறைப் பட உணர்ந்த பெரியோர்கள் இந்த உலகின் நிலையற்ற தன்மையை யறிந்து இந்தவுலக இன்பங்களைத் துறந்து நிற்பர். திருமூலர் என்ற சான்றோர் இந்த உலக இன்பங்களின் தன்மையினை ஒரே பாட்டில் அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.

‘ அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்

மடக்கொடி யாரோடு மந்தணங் கொண்டார் இடப்பக்க மேஇறை நொந்தது என்றார் கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே’

- -திருமந்திரம்: 148

தம் மனைவியிடம் அறுசுவையோடு கூடிய நல்ல

உணவினை ஆக்கச் சொன்னார் ஒரு வீட்டின் தலைவர். ஆருயிர் மனைவி அருமையாகச் சமைத்த உணவினை இனிதாக உண்டு மகிழ்ந்தார். பின்னர் மனைவியோடு இன்பப் பேச்சுகள் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இடப் பக்கத்தே சிறிது நோவு எடுக்கின்றது என்றார், அவ்வளவு தான்! சிறிது நேரத்தில் இவர் வாழ்வு முடிந்து விட்டது. இவ்வாறு திருமூலர் இவ்வுலகில் உயிர்களின் நிலையாமையினை நம் நெஞ்சில் தைக்கும்வண்ணம் சொல்லுகின்றார்.

எனவே உலக வாழ்க்கையின் இயல்பினைக் கண்ட வர்கள் இவ்வுலக இன்பங்களைத் துறந்து வாழ்வார்கள்.

இவ்வாறு துறந்தவர்தம் மனமாகிய இருக்கையிலே இறைவன் நிச்சயமாகக் கோயில் கொண்டு வாழ்கின் றான். இதனை நன்கு உணர்ந்தே திருமூலர், உள்ளம் பெருங் கோயில் ஊனுடம் பாலயம் என்றும், தாயுமான தயாபர சுவாமிகள்,