பக்கம்:நல்ல கதைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


'ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கும்
பொன்றும் துணையும் புகழ்.'

நம்ம சிங்காரம் எப்படி மாறிட்டான்? என்று அவன் தாயார் மற்றவர்களிடம் கூறினாள்.

ஆமாம்மா! என் வேலை ஆசிரியர் வேலையாயிற்றே. அன்பாலும் அறிவாலும் ஒரு புதிய சமுதாயத்தையே உருவாக்குகின்ற பொறுப்பு எங்களிடம் இருக்கிறதே! அதற்கு முதலில் தேவை பொறுமை.

'நான் செய்த தவறுக்கு இத்தனை ஆண்டுகள் கழித்துத் தண்டனை கிடைச்சிருக்கு, அந்த தண்டனையை ஏற்றுக் கொள்ள நான் ஏன் தயங்க வேண்டும்? சந்திரன் செய்தது சரி' அதனால் தான் நான் அமைதியாக இருந்தேன்.

என்னை மன்னிச்சிடு சிங்காரம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/98&oldid=1081480" இலிருந்து மீள்விக்கப்பட்டது