பக்கம்:நல்ல குழந்தை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லுக்குச் சென்றார். கடவுளைக் கண்ட தும் அக் குழந்தை தாளம் போட்டுப் பாட ஆரம்பித்துவிட்டது.

கடவுளைக் கும்பிட்டதும் தகப்பனார் அக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினார். வழியில் வருவார் போவார் எல்லோரும் அக் குழந்தையின் காலில் விழுந்து வணங்கினார்கள். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்கள் அக் குழந்தைக்கு ஆலம் சுற்றித் திருஷ்டி கழித்தனர். அன்று முதல் எல்லோரும் அக் குழந்தையை ஞானசம்பந்தர் என்று அழைக்க ஆரம்பித்தனர். ஞானசம்பந்தர் என்றால் மிகவும் அறிவு உடையவர் என்று பொருள்.

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_குழந்தை.pdf/16&oldid=1354608" இலிருந்து மீள்விக்கப்பட்டது