பக்கம்:நல்ல குழந்தை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செய்தார்கள். ஒருவராலும் முடியாமல் போய்விட்டது. பிறகு ஞானசம்பந்தர் அங்கே வந்தார். அவர் கடவுளின்மேல் பாட்டுப் பாடி, அந்த அரசர் உடம்பை விபூதியினால் தடவினார். உடனே அக் காய்ச்சல் நீங்கியது.

அன்றுமுதல் அரசர் கடவுள் பக்தி உடையவராய் இருந்தார். அங்கே இருந்த மக்களில் பலர்க்கு அப்போதும் கடவுள் மீது பக்தி உண்டாகவில்லை. அவர்கள் ஞானசம்பந்தரைச் சில ஆச்சரியமான காரியங்கள் செய்து காட்டச் சொன்னார்கள். அவ்விதமே அவர், பனை ஓலையிலே கடவுள்மீது பாட்டுக்கள் எழுதி எரியும் நெருப்பிலே போட்டார். அது எரிந்து போகாமல் அப்படியே இருந்தது. பிறகு அவர்கள், கடவுளின்மீது பாட்டு எழுதி அதை

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_குழந்தை.pdf/25&oldid=1354639" இலிருந்து மீள்விக்கப்பட்டது