பக்கம்:நல்ல சேனாபதி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நல்ல சேனுபதி

அதிகாரி ஊரை விட்டுப் புறப்பட்டார். அவரை எல்லோரும் உபசாரத்துடன் வழியனுப்பினர்கள். அவர் போன பிறகு கணக்கப்பிள்ளை கிடைக்க வேண்டிய பரிசைப் பெறலாமென்று, மோதிரத்தைக் காட்டிய செல்வரிடம் போளுர். .

செல்வர் தம் வீட்டு வாசல் திண்ணையில் உட் கார்ந்து கொண்டிருந்தார். கணக்கப்பிள்ளை போய்க் கும்பிடு போட்டார்.

"அப்படி உட்காரும்” என்ருர் செல்வர். கணக்கப்பிள்ளை உட்கார்ந்தார். - - - "எங்கே கால நேரத்தில் வந்தீர்? அதிகாரி ஒன்றும் வேலை வைத்துவிட்டுப் போகவில்லையா ?” -

"ஊர்ப்பட்ட வேலையை வைத்திருக்கிருன். இப் போதே இவ்வளவு வேலை இருக்கிறதே, இன்னும் நான் உள்ளவை உள்ளபடியே சொல்லியிருந்தால் எத்தனை வேலை செய்ய வேண்டியிருக்குமோ!'

"எத்தனை வேலையிருந்தால் உமக்கு என்ன? நீர் மனம் வைத்தால் எல்லாம் முடித்து விடுகிறீர்.”

"ஆமாம். அன்று நீங்கள் குறிப்புக் காட்டவே ஒரு கணத்தில் மாற்றித் கொள்ளவில்லையா? எல்லாம் புத்தி யிருந்தால் சாதித்து விடலாம்."

நல்ல வேளை என் குறிப்பை உணர்ந்து கொண்டீரே" - -

நீங்கள் குறிப்புக் காட்டுவது, நான் அதைக் கவனிக்காமல் போகிறதாவது ! அதை நினைப்பூட்டத் தான் இப்போது வந்தேன்.” -

"எதை?" . "மோதிரம் தருவதாகக் குறிப்பித்தீர்களே, அதைத் தான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/103&oldid=584066" இலிருந்து மீள்விக்கப்பட்டது