பக்கம்:நல்ல சேனாபதி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுத் தாலி 101

ருப்பார்; ஒரு பிரபந்தமே எழுதிக்கொண்டு போயிருப் பார். இப்போது அவ்வாறு செய்ய அவர் மனநிலை இடம் கொடுக்கவில்லை. இரவில் தமக்கு நேர்ந்த துன்பத்தை நினைத்தபோது அவருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அந்த அக்கிரமத்தை முறை யிட்டுக் கொள்ளவேண்டும் என்ற ஒரே எண்ணந்தான் முந்தியது.

நேரே அரண்மனையை அடைந்தார். நல்ல வேளை யாக மருதபாண்டியர் வெளியூருக்குப் போகவில்லை. தாம் புலவரென்றும், மருத பாண்டியரை மிக அவசர மாகப் பார்க்க வேண்டுமென்றும் சொல்லியனுப்பினர். வரலாம் என்ற செய்தி கிடைத்தவுடன் உள்ளே போய் மருதபாண்டியர் முன் நின்ருர். அவர், "நீங்கள் யார்? எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?' என்று கேட்டார்.

புலவர் பேசவில்லை. அவர் மனத்தில் உருவாக்கி வைத்திருந்த ஒரு பாடலைச் சொன்னர். முதல் நாள் நிகழ்ச்சியைத் தெரிவிக்கும் பாடல் அது. மருவிருக்கும் கூந்தல் மடவார் கணவன் அருகிருக்கத் தாலி அறுமா? - இரவினுக்குன் செங்கோல்செல் லாதா?இத் தேசம் திருடருக்குப் பங்கா? மருதபூ பா! (மரு-மணம், மடவார்-பெண்.) இந்தப் பாட்டைப் புலவர் சொல்லும்போது முதலில் ஆத்திரத்தோடுதான் தொடங்கினர்; ஆனல் அவர் என்ன அடக்கிலுைம் அடங்காமல் அழுகையும் உடன் வந்துவிட்டது.

பாட்டைக் கேட்ட பாண்டியருக்குத் தூக்கிவாரிப் போட்டது. "உட்காருங்கள், புலவரே என்ன நடந்தது? விளக்கமாகச் சொல்லுங்கள்' என்ருர். ஏதோ கற்பனைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/110&oldid=584073" இலிருந்து மீள்விக்கப்பட்டது