பக்கம்:நல்ல சேனாபதி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுத் தாலி 103

ஆறுதல் சொல்லி அழைத்துக்கொண்டு அரண்மனைக்கு வந்தார். -

அதற்குள் அறிவிற் சிறந்த மருத பாண்டியர் அவ் ஆரில் இருந்த பொன் வாணிகர் வீடுகளுக்கெல்லாம் ஆட்களை அனுப்பினர். யாரிடத்தில் புதுத்தாலி இருந் தாலும் உடனே வாங்கிவர வேண்டும் என்று கட்டளை யிட்டனுப்பினர். ஒன்றுக்கு இரண்டாகத் தாலிகள் வந்தன.

புலவரும் அவர் மனைவியும் நீராடினர்கள். பூ, பழம், புதுப் புடைவை, புது வேட்டி, திருமங்கலியம் ஆகிய வற்றை வைத்து, "புலவரே, என் நாட்டில் நடந்த அக்கிரமத்தைக் கேட்டு நான் அடைந்த வருத்தம் பெரிது. ஆளுல் அந்த அக்கிரமத்தினுல் ஒரு நன்மை உண்டாயிற்று. இரண்டாம் முறை உம்முடைய திருக் கையால் இந்த மங்கலியத்தைக் கட்டுங்கள். உங்கள் திருமணம் நடந்தது எங்களுக்குத் தெரியாது. இப் போது அந்தக் காட்சியைக் கண்டு களிக்கிறேன்' என்று கூறித் தாம்பாளத்தை நீட்டினர்.

புலவர் மனைவி புதுப்புடைவை அணிந்து புது மங்க லியத்தை அணிந்தாள். புலவரும் புத்தாடை புனைந்து புது மாப்பிள்ளையாக விளங்கினர். அன்று விருந்துணவு உண்டு களித்தனர் இருவரும். புலவர் மனைவிக்கு வேறு அணிகலன்களும் வழங்கிளுர் சிவகங்கைத் தலைவர்.

சிலநாட்கள் புலவரும் அவர் மனைவியும் அரண்மனை விருந்தினர்களாகவே இருந்தார்கள். அதற்குள் மருத பாண்டியர் தக்க ஆட்களின் மூலம் திருடர்களைக் கண்டு பிடித்துத் தண்டித்தார்.

மருத பாண்டியர் புகழைப் பாட்டால் உரைத்தார் புலவர். பிறகு பலவகைப் பரிசில்கள் பெற்று விடை கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/112&oldid=584075" இலிருந்து மீள்விக்கப்பட்டது