பக்கம்:நல்ல சேனாபதி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தளவரிசை 111

கையில் வைத்திருந்த சிறிய துண்டை அங்கே விரித் தாள். தன் கை வளையைக் கழற்றி அதில் வைத்தாள். பிறகு காலில் இருந்த அணியைக் கழற்றி வைத்தாள்.

அவள் நாத்திக்கு ஒன்றுமே விளங்கவில்லை; “என்ன அண்ணி இது? ஏன் இப்படிச் செய்கிருய்?”

என்று கேட்டாள்.

"பேசாமல் இரு ; திரிகூடாசலபதியின் திருக் கோயிற் பிராகாரம் முழுவதும் கல்லால் தள வரிசை போட வேண்டும். இந்த யோசனையை அந்தப் பெரு மான் உன் வாயிலாக அறிவுறுத்தினன்.”

இப்படிச் சொல்லிக் கொண்டு அந்தப் பெண்மணி மூக்குத்தியைக் கழற்றினுள்; காதணியை எடுத்து வைத் தாள். திருமங்கலியத்தைத் தவிர மற்ற அணிகலன்கள் அனைத்தையும் கழற்றி வைத்து விட்டு, கோயிலில் இருந்த தர்மகர்த்தரை அழைத்து வரச் சொன்னுள்.

"இதோ பாருங்கள்; இந்த அணிகலன்கள் யாவும்

கோயிலுக்கு நான் வழங்கி விட்டேன்” என்று அவரிடம் சொன்னுள்.

“என்ன இப்படித் திடீரென்று யோசனை வந்தது?” என்று கேட்டார் தர்மகர்த்தர். -

“இவ்வளவையும் விற்றுப் பணமாக்குங்கள். இந்தத் திருக்கோயிலின் வெளிப் பிராகாரம் முழுவதும் கல்பாவி விடுங்கள். இந்த அணிகலன்கள் போதவில்லை யானுல் மேற்கொண்டு பொன்னும் பொருளும் அனுப்புகிறேன் ' என்ருள் சமீன்தாரிணி.

“என்ன அண்ணி இது? அண்ணுவுக்குத் தெரி யாமல் இப்படிச் செய்யலாமா?” என்று நாத்தி கேட்டாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/120&oldid=584083" இலிருந்து மீள்விக்கப்பட்டது