பக்கம்:நல்ல சேனாபதி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகதூர் ெ தாண்டைமான் 1?

அவரிடம் சொல்லி ஆலோசனை செய்ய வந்தவர்களிற் சிலர், இன்னும் அவரைக் காண முடியாமல், அதற்குரிய செவ்வியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். -

இந்த நிலையில் தான் நவாபைக் காண முடியா தென்று எண்ணிய மூலனூர்த் தொண்டைமான் ஊருக்குச் சென்று பின்பு ஒரு முறை வரலாம் என்று எண்ணின்ை. ஆலுைம், அவனுக்கு இப்போதே பார்த்து விட வேண்டும் என்று வேகம் உண்டாயிற்று. எடுத்த காரியம் சிறியது. இதில் வெற்றி பெருவிட்டால் வேறு எந்தக் காரியத்தைச் சாதிக்கப் போகிருேம் ? என்று அவனுக்குத் தோன்றியது. எப்படியாவது நவாபைப் பார்த்து விட்டே செல்வதென்று முடிவு கட்டின்ை.

நவாபுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் மிடுக் குடையவன். கோழிப் போர், ஆட்டுக்கடாப் போர் இவற்றில் மிகவும் விருப்பம் உள்ளவன். அவனே ஓர் ஆட்டுக் கடாவை வளர்த்து வந்தான். அது கொழு கொழு வென்று வளர்ந்தது. நெடுந்துாரம் வரும் போதே அதன் நாற்றம் வீசும்.அந்த ஆட்டை நவாபின் பிள்ளை சங்ககிரிக்கும் அழைத்து வந்திருந்தான். -

வளமான உணவைத் தின்று கொழுத்திருந்த ஆடு சங்ககிரி வீதியிலே உலா வரும். வேறு ஆட்டைக் கண்டால் எளிதில் விடாது. ஆடு என்ன? மாட்டைக் கூட அது எதிர்க்கும். நாயை முட்டும். தன்னுடைய வலிமையில்ை அது எல்லோரையும் அஞ்சச் செய்தது. நவாபின் மகன் வளர்க்கும் ஆடல்லவா? அதனல் யாரும் அதை ஒன்றும் செய்வதில்லை ; போகிற போக்கிலே விட்டு விட்டார்கள்.

நவாபின் ஆடு வருகிறதென்றல், குழந்தைகளுக் கும் பெண்களுக்கும் குடர் குழம்பும். இன்று அவனை

2 س--g .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/26&oldid=583989" இலிருந்து மீள்விக்கப்பட்டது