பக்கம்:நல்ல சேனாபதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகதூர் தொண்டைமான் 19.

தொண்டைமான் அந்த முரட்டுக் கடாவை அடக் கியதைக் கண்ட ஊர் மக்கள் வியந்தார்கள். அவனுடைய வீரத்தைப் பாராட்டினர்கள். சிலர், நவாபின் காதில் விழுந்தால் இவனை என்ன செய்வாரோ?' என்று அஞ்சினர்கள். தொண்டைமான் அவர்கள் வார்த்தை ஒன்றையும் காதில் போட்டுக் கொள்ளாவிட்டாலும், அந்த ஆடு நவாபின் மகன் வளர்க்கும் செல்ல ஆடு என்ற செய்தியைத் தெரிந்து கொண்டான். அப்போது அவனுக்கு ஒரு புதிய எண்ணம் தோன்றியது. - -

மறுநாள் அந்த ஆடு வரும் வழியையே பார்த்துக் கொண்டு தெருவில் நின்றிருந்தான் தொண்டைமான். ஆடு வந்தது. அதை வீரன் பற்றினன். அது திமிறியது. அதனை அடக்கியதோடு தன் கையில் இருந்த கூரிய அரிவாளால் அதன் காதுகள் இரண்டின் நுனியையும் அறுத்து விட்டான். இதுவரையில் எதிர்ப் பின்றி மனம் போலத் திரிந்த அந்த ஆட்டுக்குச் சினம் பொங்கியது. ஆனாலும், தொண்டைமான் இட்ம் தெரிந்து தட்டிய தட்டுகளால் அது சோர்வடைந்து போய்விட்டது. . . . . .

கடாவின் காதை அறுத்த இந்தச் செய்தி ஊர் முழுவதும் பரவியது. "ஐயோ, பாவம் இவனுக்கு என்ன போதாத காலமோ, இந்தக் காரியத்தைச் செய்து விட்டான்!” என்றே யாவரும் இரங்கிஞர்கள். நிச்சயம் தொண்டைமானுக்குத் தக்க தண்டனை கிடைக். கும் என்றே அஞ்சினர்கள். ஆனல், அதே சமயத்தில் 'இப்படி ஒரு வல்லாள கண்டன் வந்தால்தான் அந்த முரட்டு ஆடு அடங்கும்” என்றும் பேசிக்கொண்டார்கள்.

காதறுந்த ஆடு நவாபின் மகன் முன் போய் நின்றது. அவன் முக்கறுந்தவன் போல் ஆளுன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/28&oldid=583991" இலிருந்து மீள்விக்கப்பட்டது