பக்கம்:நல்ல சேனாபதி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகதூர் தொண்டைமான் 21

காத்துக் கொண்டிருக்கிறேன். பேட்டி கிடைக்கவில்லை. எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்ற ஆசை எழுந்தது. நவாபு சிறந்த வீரர்களைப் பாராட்டும் பெரு வீரர் என்று கேள்வியுற்றிருக்கிறேன். கோழைகளைப் போல் அஞ்சாமல் வீரச் செயல் செய்கிறவர்களிடம் நவாபு வமிசத்தாருக்கு அன்பு அதிகம் உண்டென்பதை எல்லாரும் சொன்னர்கள். அதனுல் சமுகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை பொங்கி எழுந்தது. அதனுல் இப்படிச் செய்தேன்.” -

" இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் ?” “சமுகத்தின் கவனம் இந்த ஏழையின்மேல் பட வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. நான் எந்தப் பாளையத்துக்கும் சொந்தக்காரன் அல்ல. அரசாங்க அதிகாரியும் அல்ல."

ஏன் என்னைப் பார்க்க வேண்டும் ?" z " நல்ல அரசரென்றும் வீரத்தைப் பாரரட்டுகிறவ ரென்றும் சொன்னர்கள். அதனுல் பார்க்க எண் னினேன். வீரம் ஒன்றுதான் நான் பெற்றிருப்பது. அதைச் சமுகத்துக்குப் பயன்படும்படி செய்ய வேண்டும் என்பது என் ஆசை. இதைத் தெரிவிக்க வேறு வழி. இல்லை. அதனுல்தான் இந்தக் காரியத்தைச் செய்தேன். சமுகத்தின் முன்னே வலிய இழுத்துச் சென்று நிறுத்தி, வைப்பார்கள் என்று தெரிந்தே இதைச் செய்தேன். சமுகத்தின் முன் நின்று பேசவேண்டும் என்பதற் காகவே இது செய்தேன்.

தொண்டைமானுடைய பேச்சும் மிடுக்கும் உரு வமும் நவாபின் உள்ளத்தை ஈர்த்தன. அவன் தமக்குப் பயன்பட வேண்டும் என்ற விருப்ப முடையவன் என்பதைத் தெரிந்து கொண்டபோது அவர் சினம் தனிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/30&oldid=583993" இலிருந்து மீள்விக்கப்பட்டது