பக்கம்:நல்ல சேனாபதி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு தேர் ஈந்த செல்வன் 3?'

அப்போது பல்லவராயர் சிரித்தார். "பையனுக்கு மூன்று ஆண்டு நடக்கிறது. இப்போதுதான் மெல்லத் தளர் நடையிட்டு நடக்கிருன்” என்ருர், -

"அப்படியா தளர் நடையிடும் குழந்தைக்குச் சின்ன நடை வண்டி வாங்கிக் கொடுத்திருக்கிறீர்களா?” என்று கேட்டான் சோழன்.

'இல்லை; இனிமேல்தான் செய்து தரச் சொல்ல வேண்டும்' என்ருர் வீரர். - -

"இங்கே நல்ல வேலைக்காரர்கள் இருக்கிருர்கள். அவர்களைக் கொண்டு அழகான சிறு தேர் ஒன்றுசெய்து அனுப்புகிறேனே!” என்ருன் சோழன். -

'இந்தச் சிறிய பண்டத்துக்கு அரசர் பெருமான் தொல்லையை மேற்கொள்வானேன்?” - தொல்லையா? ஏதோ என் அன்பின் அறிகுறியாக இருக்கட்டும் என்று நினைக்கிறேன். வயசுவந்த பிள்ளை யானுல் குதிரை கொடுக்கலாம். யானையையே வழங் கலாம். இப்போது சிறு தேர்தான் பயன்படும்.”

மேலே மறுக்க வழியில்லாமல் பல்லவராயர் ஒப்புக் கொண்டார். - -

நீங்கள் ஊருக்குப் போய் வாருங்கள். நான் பின்பு சிறு தேரை அனுப்புகிறேன்' என்று சொன்ன சோழன், வேறு வகையான பரிசுகளையும் பொருளையும் அவருக்குக் கொடுத்து அனுப்பின்ை. - . . .

சில காலம் கழித்துச் சோழன், மும்முடிப் பல்லவ ராயருடைய குழந்தைக்கு நடைவண்டி செய்வித்து அனுப்பின்ை. மரத்தால் செய்தவண்டியா அது? அவன் தன் சிறப்புக்கு ஏற்றபடி, ஒரு சிறு தேரையே, குழந்தை கள் இழுக்கும் தேரையே, அனுப்பிவிட்டான். தங்கத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/46&oldid=584009" இலிருந்து மீள்விக்கப்பட்டது