பக்கம்:நல்ல சேனாபதி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

எனக்குத் துணையாக இருந்தன. இந்தப் பன்னிரண்டு நிகழ்ச்சிகளில் முதலில் உள்ள எட்டும் கொங்கு காட்டில் கடந்தவை. கொங்கு மண்டல சதகத்திலுள்ள பாடல் களைக் கொண்டும், அவற்றிற்கு மேற்கோளாகக் காட்டப் பெற்றுள்ள செய்யுட்களைக் கொண்டும் இவற்றை உருவாக்கினேன். மணல் பரப்பிய வள்ளலைத் தொண்டை மண்டல சதகத்தால் உணர்ந்தேன். ஒர் அன்பர் கூறிய செய்தியிலிருந்து ஆயிரம் வேலி அதம்பார் உருவாயிற்று. புதுத் தாலி என்பதும் வாய்மொழியாகக் கேட்டு அறிந்ததே. சொக்கம்பட்டியாருடைய சரித்திரத்திலிருந்து தெரிந்துகொண்டது, தளவரிசை என்பதிலுள்ள நிகழ்ச்சி.

ஆர்வத்துடன் இளைஞரும் பிறரும் படித்து மகிழ வேண்டும் என்னும் கோக்கத்தோடு, இடையிடையே உரைநடையை விரவ வைத்தும், வருணனைகளே இணைத் தும் சிறு கதை யுருவத்தில் இந்த வரலாறுகளே எழுதினேன். இத் துறையில் இதற்கு முன் நான்கு புத்தகங்களை வெளி யிட்டிருக்கிறேன் என்பதை அன்பர்கள் அறிவார்கள்.

கி. வா. ஜகந்நாதன்

' காந்தமலை : |

27—11—58

கல்யாண நகர்

சென்னை-28 !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/6&oldid=583969" இலிருந்து மீள்விக்கப்பட்டது