பக்கம்:நல்ல சேனாபதி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 நல்ல சேனுபதி

ஒன்று செய்யலாம் என்று அடியேனுக்குத் தோன்று கிறது. அந்த நன்றியறிவுச் செயலுக்கு மன்னர் பிரான் இசைந்தருள வேண்டும்.”

'நீங்கள் விளக்கமாகச் சொல்லுங்கள்." 'கொங்கு நாட்டு வேளாளர்களாகிய நாங்கள் எங்கள் வீட்டில் திருமணம் நடைபெறும்போது அர சாங்கத்துக்கு ஒரு வரி செலுத்தி வருகிருேம். அந்த வரியை இனிமேல் இந்தக் கவிச் சக்கரவர்த்திக்குச் செலுத்தும்படி இங்கே உத்தரவாக வேண்டும்.” :

'குடிமக்கள் இசைவார்களா?” "அவர்கள் இப்பெருமானைத் தெய்வமாகக் கொண் டாடுகிறர்கள். இந்தச் செய்தியை அறியாதவர்களுக்கு நாங்கள் சொல்லி இசையச் செய்கிருேம். மன்னர் பிரான் கட்டளையிட்டுவிட்டால் யாவரும் செய்வார்கள்.' அரசன் சிறிதே யோசனை செய்தான். “சரியான யோசனை கூறினர்கள். நாடு முழுவதும் பாராட்டும் அற்புதமான செய்கை செய்த கவிஞருக்கு ஏற்ற மரி யாதை இது அப்படியே செய்துவிடலாம்” என்று சோழ மன்னன் இசைந்தான். -

அப்போது கம்பர் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந் தார். அவர் அகக் கண்ணில் கொங்கு நாட்டுப் புலவர் கள் வந்தார்கள். அவர்களுடைய வறிய நிலை நினைவுக்கு வந்தது. புலவர்பிரான் எழுந்தார்; 'அடியேனுடைய சிறிய விண்ணப்பும் ஒன்றுக்குச் செவி சாய்த்தருள வேண்டும்” என்ருர். அருகில் இருந்தவர் அனைவரும் கம்பர் திருமுகத்தையே நோக்கினர். அரசன் மலர்ந்த முகத்துடன் அவரைப் பார்த்தான். .

"கொங்கு நாட்டில் வழக்கில் இருக்கும் கல்யாண வரிப்பணத்தை அடியேனுக்குத் தரும்படி கட்டளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/69&oldid=584032" இலிருந்து மீள்விக்கப்பட்டது