பக்கம்:நல்ல சேனாபதி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவிகை தாங்கிய வீரன்

தென்னர்க்காடு மாவட்டத்தில் ஆறகளூர் என்று ஒர் ஊர் உண்டு. அது முன் காலத்தில் பெரிய நகராக, ஆறு அகழிகளையும் சிறந்த கோட்டையையும் உடைய தாக விளங்கியது. ஆறு அகழிகளே உடையதளுல் தான் ஆறகழுர் என்ற பெயரே உண்டாயிற்று. அதை ஆறை என்று புலவர்கள் செய்யுளில் பாடியிருக்கிருர் கள். அதைத் தலைநகராகக் கொண்ட நாட்டுக்கு மகத மண்டலம் என்று பெயர். அந்த நாட்டுக்குத் தலைவ குய்ப் பெரு வீரகை இருந்த வாணகோவரையன் இராசராச தேவன் என்ற அரசனே ஆறகளூர் என்ற நகரை உண்டுபண்ணி அதில் இருந்து அரசாண்டு வந்தான். வாண அரசர்கள் மகாபலி சக்கரவர்த்தியின் வழி வந்தவர்கள் என்று தம்மைச் சொல்லிக் கொள்வார் கள். அந்தக் குலத்தில் வந்தவன் ஆறைவாணன். அவன் மகத மண்டலத்துக்குத் தலைவனுக இருந்தமை யால் மகதேசன், மாகதர்கோன் என்று புலவர் அவனைப் பாடினர். வீரத்திலே சிறந்திருந்ததுபோலவே அறத் திலும் அவன் சிறந்து நின்றன்.

பாண்டியனுக்கும் அவனுக்கும் ஒருமுறை போர் 'மூண்டது. அந்தப் போரில் முடியுடை அரசனுக இருந் தாலும் பாண்டியன் தக்க படை வீரர்களைத் தொகுக்கா மையால் வாணனுக்கு எதிர் நின்று போரிட இயல வில்லை. சில நாட்கள் போர் நடந்தது. இறுதியில் பாண்டியன் தோல்வியுற்றன். அதுமுதல் அவன் ஆறைவாணனுக்கு அடங்கினவளுகி விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/71&oldid=584034" இலிருந்து மீள்விக்கப்பட்டது