பக்கம்:நல்ல சேனாபதி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவிகை தாங்கிய வீர்ன் 65

அவனுடைய உடல் மிடுக்கையும பேசசிலருந்த உறுதியையும் கண்ட பாண்டியன் அவன் சொன்ன படியே செய்வான் என்று நம்பின்ை. அவனுக்கு என்ன என்ன வேண்டுமோ, அவற்றையெல்லாம் கொடுக்கும்படி கட்டளை இட்டான்.

ஆறகமூர் என்பது கொங்குநாட்டின் எல்லைக்கு அருகில் இருப்பது. சூரியனென்னும் வீரன் அந்த எல்லையில் பாண்டியனுடைய படை ஒன்றை வந்து இருக்கச் செய்தான். கொங்குநாட்டின் பெரும் பகுதி அக் காலத்தில் பாண்டியன் ஆட்சிக்குள் அடங்கி யிருந்தது. சங்ககிரி என்ற ஊரில் ஒரு மலையும் அதில் ஒரு கோட்டையும் இருக்கின்றன. பாண்டிய மன்னன் அங்கே வந்து தங்கியிருந்தானஞல், தான் ஆறகளூர் வாணனை அங்கே பிடித்துக் கொண்டுவந்து விடுவதாகச் சூரியன் சொன்னன். அப்படியே பாண்டியன் சங்க கிரியை அடைந்தான்.

சூரியன் வேறு சில நண்பர்களோடு கூலி வேலை செய்பவர்களைப்போல அழுக்காக உள்ள ஆடைகளைப் புனைந்துகொண்டு ஆறகளூர் போனுன். அங்குள்ள மக்களிடம் தாங்கள் வேறு நாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும், தம்மைக் காப்பாற்றிய செல்வர் திடீரென்று இறந்து போய்விட்டமையால் தம்மைப் பாதுகாப்பவர் இல்லாமல் அங்கே பிழைக்க வந்திருப்பதாகவும் அவர்கள் சொல்லிக் கொண்டார்கள். . .

'உங்கள் நாட்டை விட்டு இவ்வளவு தூரம் ஏன் வந்தீர்கள்? அங்கேயே ஏதாவது தொழில் செய்து பிழைக்கக்கூடாதா?’ என்று அந்த ஊர்க்காரர்கள் கேட்டார்கள். - -

"எங்களுக்கு வேறு தொழிலே தெரியாது. பல்லக்

குச் சுமக்கும் தொழில் ஒன்றுதான் தெரியும். ஆகை ,禹...5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/74&oldid=584037" இலிருந்து மீள்விக்கப்பட்டது