பக்கம்:நல்ல சேனாபதி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவிகை தாங்கிய வீரன் 67

கொடுத்த வாக்கை நிறைவேற்றும் செவ்வியை எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். . . . . .

ஒரு நாள் இரவு வாண அரசன் நெடுநேரம் மகளி ருடைய ஆடல் பாடலைக் கண்டு இன்புற்ருன். மறுநாள் விடியற்காலையிலே எழுந்து ஏதோ ஓர் இடம் போக வேண்டும் என்று திட்டமிட்டிருந்தான். குதிரையிற் போகாமல் சிவிகையிலே போக எண்ணினன். முதல் நாள் தூங்காமல் இருந்த அலுப்பினுல் தளர்வடைந் திருந்ததால் தூக்கம் தூக்கமாக வந்தது. ஆகையால் குதிரையில் போக விரும்பாமல் சிவிகையிலே ஏறிப் புறப்பட்டான். -

அரசன் முதல் நாள் சரியாகத் தூங்கவில்லை என் பதைச் சூரியன் உணர்ந்திருந்தான். சிவிகையில் அரசன் ஏறியவுடன் சூரியனும் அவன் நண்பர்களும் அதைத் தூக்கிக்கொண்டனர். சிவிகைக்கு முன் பக்கத் தில் சூரியன் இருந்தான். விடியற்கால வேளை, இன் னும் கருக்கல் வாங்கவில்லை. சிவிகையில் ஏறின மன் னன் அதிலே உறங்கிப் போன்ை. -

இதுதான் தக்க சமயமென்று அறிந்த சூரியன் மகத மண்டலத்தின் எல்லையை வெகு வேகமாகத் தாண்டிச் சிவிகையைக் கொங்கு நாட்டுக்குள் கொண்டு வந்து விட்டான். அங்கே இருந்த வீரர்களும் சேர்ந்துகொண். டனர். அவர்களும் மாறி மாறிச் சிவிகையைத் துரக்கிய தால் மிகவும் வேகமாக அவர்களால் போக முடிந்தது.

வாணன் கண் விழித்து வெளியே பார்த்தான். புதிய இடமாக இருந்தது. சிவிகையைச் சுற்றி ஆயுதம் ஏந்திய வீரர்கள் நடந்து வருவதைக் கண்டான். தனக்கு ஏதோ தீங்கு நேர இருக்கிறதென்பதை உணர்ந்து கொண்டான். . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/76&oldid=584039" இலிருந்து மீள்விக்கப்பட்டது