பக்கம்:நல்ல சேனாபதி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 நல்ல சேனபதி

"அவர் கொடுத்து இளைத்தவர். இப்போது அவரைக் கவனிப்பவர் யாரும் இல்லை. எனக்குப் பழக்கமானவர். அவருடைய வீடு மிகவும் சிதைந்து போயிற்று. அதைக் கட்டமுடியாமல் திண்டாடுகிருர். தமக்குத் தெரிந்தவர்களிடம் உதவி பெற அவர் நாணு கிருர். அவர் நன்ருக வாழ்ந்தபோது அவரிடம் உதவி பெற்றவர்கள் இப்போது ஏறெடுத்தும் பார்ப்பதில்லை."

"அப்படியா? நான் ஒன்றும் அறிந்து கொள்ள முடியவில்லையே' - . . . . . . - "அவருடைய நிலை எனக்கு மிக்க துயரத்தைத் தந்தது. சோழநாட்டுக்காரராகிய அவருக்குத்தொண்டை நாடு புதியது. நீங்கள் எல்லோருக்கும் வேண்டியது தருவதை நான் அவரிடம் சொன்னேன். பேசிக் கொண்டிருக்கும்போது உங்களைப்பற்றிச் சொல்ல நேர்ந்தது. அதைச் சொல்லும்போது எனக்கு எந்த நினைவும் இல்லை. ஆனல், அதைக் கேட்ட அவர், அப்படியும் ஒரு செல்வர் இந்த உலகத்தில் இருக் கிருரா?' என்று கேட்டுப் பெருமூச்சு விட்டார். அப் போதுதான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது; அவரை உங்களிடம் அனுப்பினல் என்ன என்ற எண்ணம் வந்தது.” - " "நீங்கள் அனுப்பித்தான் அவர் வந்தாரா? அவர் அதைச் சொல்லவில்லையே! .

"அவர் இங்கே வந்ததே பெரிய காரியம். எப்படி யாவது இங்கே அவரை வரச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு பல நியாயங்களைச் சொன்னேன்; வற்புறுத்தினேன். அவர் இறுதியில், வருவதாக ஒப்புக் கொண்டார். நானே அழைத்து வருவதாகச் சொன் னேன். அவர் இசையவில்லை. அவுர் இங்கே வந்ததைக் கேட்டதும், முதலில் எனக்கு அளவிற்ற களிப்பு உண்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/93&oldid=584056" இலிருந்து மீள்விக்கப்பட்டது