பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா மீண்டும் கேட்பது! அருச்சு கொடுக்க மறுத்தால்?... கண்ணன்: தருமம் அவர்களைத் தண்டிக்கட்டும். பீமன்: இல்லை, நான் தண்டிக்கிறேன்! என் கதையை எடுத்து வீசினால், அவர்கள் கதை முடியும். நமது துன்பமும் விடியும். * கண்ணன். அது நம்மால் முடியும். ஆனால், தருமம் காக்கப் பட வேண்டாமா? தரணியில் உள்ளவர்கள் நம்மைப் பற்றித் தாறுமாறாகப் பேச இடந் தரலாமா? 于J,T கண்ணா! தருமம் நிலைக்க நீங்களே ஒரு வழி சொல்லுங்கள். நகுலன்: உங்களுக்குத்தான் தெரியும். உங்களால் தான் . LD لاعاLD) தருமன்: நமக்குரிய நாட்டைக் கேட்க வேண்டியது தான் தருமம் என்றால், துரியோதனனிடம் சென்று நீங்களே கேட்கலாமே! கண்ணன்:உங்கள் விருப்பம் அதுவானால், அதைச் செய்ய வேண்டியது என் கடமை. இல்லையா சகோதரி? பாஞ்சாலி:தூதுப் போகப் போகிறீர்களா?... JJ;T、 ஆமாம், நம் சார்பாக அனுப்புவோம். நகுலன்: தருமத்தைக் காப்போம். தரணியைக் கேட்போம். தூதுதானே அதற்கு வழி... -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/97&oldid=775522" இலிருந்து மீள்விக்கப்பட்டது