பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முன்னுரை பாடுவதென்ருலும், ஆடுவதென்ரு லும் குழந்தைகளுக் குக் |கொண்டாட்டம்தான். எதையும் கூர்ந்து நோக்குவதி இலும், என்னவென்று அறிந்துகொள்ள ஆசைப்படுவதிலும், அவற்றை எப்படியாவது புரிந்துகொள்ள முயல்வதிதம் அவர்களுக்கு நிகர் அவர்களே! சொல்லித்தரும் கருத்துக்கள் சுவையானதாக மட்டு மன்றி, பயனுள்ளதாகவும் அமைந்துவிட்டால், படிக்கும் குழந்தைகளின் எதிர்காலம் பண்புள்ளதாய்,சமுதாயத்திற்கு துணை கொடுப்பதாய் அமைந்து விடும். சமுதாயத்தின் அங்கங்களாய் விளங்கும் குழந்தைகளை, குணத்தில் தங்கங்களாய், கொள்கையில் சிங்கங்களாய் மாற்றிவிட்டால், வாப் பிளந்தலே பும் வாழ்க்கைப் பிரச் சினைகள், பல, வாலை சுருட்டிக்கொண்டு ஓடிவிடுமே ! அத்தகைய நன்னேக்கிலே, குழந்தைகளுக்குத் தேவை என்று நான் கருதிய கருத்துக்களை மையமாக வைத்து, எளிமையும், இனிமையும் நிரம் பிய பாடல்களாய் எழுதி யிருக்கிறேன். உடலுக்குப் பயிற்சி வேண்டும். உடல் உறுதியாய் அமைய வேண்டும். உழைப்பு, பணிவு, உயர்ந்த அறிவு வேண்டும் என்ற கருத்துக்களை வலியுறுத்தியிருக்கும் பாடல் கள் தான் அதிகம். -- பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்குப் பயன்படும்வகை சில் உருவான இந்நூலே ஏற்று ஆதரிக்க வேண்டுகி றேன். எஸ். நவராஜ் செல்லையா