பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நல்ல பிள்ளையார்

3

ஒரு நாள் மாமியாருக்கு அதிகக் கோபம் வந்து விட்டது. "இந்தப் பிள்ளையாரைத் தூக்கி எறிந்து விடு. இல்லாவிட்டால் யாருக்காவது கொடுத்துவிடு. இனிமேல் இந்தப் பிள்ளையாரோடு நீ இந்த வீட்டில் இருக்கக் கூடாது" என்று இரைந்தாள்.

கமலாவுக்கு மிகவும் வருத்தமாகப் போய் விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினாள். கடைசியில் மாமியார் பிள்ளையாரைப் பிரியும்படி வற்புறுத்தினுல், அந்த வீட்டை விட்டே போய்விடுவது என்று தீர்மானம் செய்து கொண்டாள்.

அப்படி ஒரு நாளும் வந்தது. மாமியார் காளியைப் போல் நின்றுகொண்டு, "இந்தப் பிள்ளையாரைக் கொண்டு போய்க் குளத்தில் எறிந்து விட்டு வா. இல்லாவிட்டால் இந்த வீட்டில் இருக்கக் கூடாது. போ வெளியே!" என்று கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளாத குறையாக அவளைத் துரத்தினாள்.

'இனிமேல் இந்த வீட்டில் இருந்து காலம் தள்ள முடியாது' என்று தெரிந்துகொண்ட கமலா பிள்ளையாரை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள். அவள் அதைக் குளத்தில் எறிந்துவிட்டு வரப் போகிறாள் என்று மாமியார் எண்ணிறாள்.

ஆனால் கமலாவோ, “இந்த வீட்டில் இனிமேல் இருக்கக்கூடாது' என்ற தீர்மானத்தின்மேல். வெளியேறினாள்.