பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
36 நல்வழிச் சிறுகதைகள்
 

வணிகர்தாம். அவர் ஒரு நாள் கண்ணப்பர் வெட்டிய குளத்தை வந்து பார்த்தார். கற்கரையும் படியும் அமைக்காமல் விட்டது ஒரு பெருங் குறையாக அவருக்குத் தோன்றியது.

அவர் கண்ணப்பரிடம் சென்றார். தம் மனக் கருத்தை வெளியிட்டார். கரையமைக்காவிட்டால் குளம் விரைவில் தூர்ந்துவிடும் என்ற உண்மையை எடுத்துக் கூறினார். “நான் என்ன செய்வேன். என்னிடம் அதற்கு மேல் பணம் இல்லையே!” என்றார் கண்ணப்பர். என்னிடம் சேமிப்புப் பணம் சிறிது இருக்கிறது. அதைத் தருகிறேன். கரையும் படியும் அமைத்து விடுங்கள்” எனக் கூறினார் நல்லப்பர். அவ்வாறே பணமும் கொடுத்தார். கண்ணப்பர் அதன்பின் தம் அறப்பணியைச் செவ்வனே செய்து முடித்தார். கண்ணப்பர் நல்லப்பர் செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்க வில்லை. நல்லப்பரின் நண்பர் சிலர் அவரிடம் வந்து, கரை கட்டிப் படி அமைத்தவர் நல்லப்பர்’ என்று ஒரு கல் நாட்டும்படி கண்ணப்பரை வற்புறுத்த வேண்டும் என்றார்கள்.

நல்லப்பர் மறுத்துவிட்டார். "அறம் செவ்வனே நடக்க வேண்டும். அதுதான் நம் குறிக்கோள். பெயர் நாட்டுவது அல்ல” என்று கூறினார் நல்லப்பர்.

கருத்துரை:- நல்லவர்கள் மக்கள் நலத்தையே நாடுவர். தங்கள் புகழை காட்டிக்கொள்ள நினைக்கமாட்டார்கள்.