பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66 நல்வழிச் சிறுகதைகள்

என்று கேள்விப்பட்ட அந்த ஊர் மக்கள் அவர்களைச் சுற்றிக் கூட்டம் கூடிவிட்டார்கள்.

"எங்களோடு போட்டி போட்டு நீந்தக்கூடிய இளைஞர்கள் இந்த ஊரில் யாராவது இருக்கிறார்களா?' என்று அவர்கள் சவால் விட்டார்கள். அவர்களோடு போட்டி போட பத்து இளைஞர்கள் முன் வந்தார்கள்.

போட்டி நடத்த ஏற்பாடாயிற்று. அவ்வூரில் ஒடிய ஆற்றின் ஒரு கரையில் உள்ள ஒரு துறைக்கு நீந்திச்செல்ல வேண்டும். நீச்சல்காரர்கள் குறிப்பிட்ட நேரத்தில் நீந்தத் துவங்கினார்கள். மக்கள் கூட்டம் கரையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. வழக்கம்போல் வீரனும் சூரனுமே முதலில் நீந்திச் சென்று அக்கரை சேர்ந்தார்கள். அவர்களுக்கு மக்கள் பலப்பல பரிசுகளை அள்ளி வழங்கினார்கள். இவற்றையெல்லாம் கண்டு தோற்றுப்போன இளைஞன் ஒருவனுக்கு ஆத்திரம் உண்டாயிற்று. அவன் அவர்களை நோக்கிக் கூறினான்: "ஆற்றைக் கடந்த விட்டீர்கள்! இது அப்படியொன்றும் பெரிய செயலல்ல. உங்களால் கடலைக் கடக்க முடியுமா?’’

கடலா? அது என்ன?’ என்று வியப்புடன் வீரனும் சூரனும் கேட்டனர். அவர்கள் அதற்கு முன் கடலைப் பார்த்ததேயில்லை.

"கடலுக்குக் கரையே கிடையாது” என்று ஒரு பெரிய மனிதர் கூறினார்.