பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.26 நல்வழிச் சிறுகதைகள்
 

திருநீறும்தான் இருந்தன. கையில் வாள் இல்லை; திருநீற்றுப் பைதான் இருந்தது.

வீரர்களோ வாளை உருவிக் கொண்டு சூழ்ந்து நின்றனர். மற்ற சிவனடியார்கள் இருவரும் மிரண்டு நின்றனர்.

“பேசாமல் எங்கள் பின்னே வாருங்கள். தப்ப முயன்றால் உயிர் பறிபோகும்!”என்று எச்சரித்தான், அர்ச்சுனன். அவன் குரலைக் கேட்டவுடனே, அவன் போர்க்களத்திலே தன்னை எதிர்த்து நின்ற சேர நாட்டு வீரரிலே ஒருவன் என்று திருமாவலி கண்டு கொண்டான்.

அவனுக்குக் கோபம் கொப்பளித்தது. ஆனால், வாள் பிடித்த வீர பதினொருவர் முன், வாளைக் கண்டால் நடுங்கும் சிவனடியார் இருவருடன் நிற்கும் தான், என்ன செய்ய முடியும் என்று சிந்தித்தான். பகைவன் கட்டளைக்குப் பணிந்து போவதா என்று அவன் வீர உள்ளம் கேள்வி போட்டது.

“வீரனே, நான் உன்னுடன் வர முடியாது. உங்களில் யாராவது ஒருவன் என்னுடன் மற்போரோ, வாட்போரோ செய்து தோற்கடித்து விட்டால், அதன்பின் வருகிறேன்!” என்று கூறினான் திருமாவலி.

“உன்னோடு இப்போது நாங்கள் போராட வரவில்லை; பிடித்துப் போகத்தான் வந்திருக்கிறோம். மேற்கொண்டு பேசாதே, நட!’ என்று ஆணையிட்டான் அர்ச்சுனன்.