பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாரா. நாச்சியப்பன் 59
 

புலம்பிக்கொண்டிருந்த ஒலி கேட்டது. மன்னன் அந்த வீட்டை தெருங்கினான். கதவு அடைத்துக் கிடந்தது. சாவித் துளையின் வழியாக அவன் உள்ளே எட்டிப் பார்த்தான்.

கூடத்தில் ஒரு சிறு விளக்கு மினுக் மினுக்கென்று எரிந்து கொண்டிருந்தது. பாயில் ஒர் இளம் பெண் நோயாகப் படுத்திருந்தாள். எலும்பு வடிவமாகக் களையிழந்து கிடந்த அந்தப் பெண்ணின் கதி எப்படி முடியுமோ என்று கலங்கிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் கிழவி.

பாண்டியன் கதவைத் தட்டினான். கிழவி எழுந்து வந்து கதவைத் திறந்தாள்.

முன் பின் அறியாத ஒரு மனிதனைக் கண்ட தும், அவள், என்ன வேண்டும் ?” என்று கேட்டாள்.

“அம்மா, நான் வெளியூரைச் சேர்ந்தவன். வீதி வழியாய்ப் போய்க் கொண்டிருக்கும் போது, இங்கு அழுகுரல் கேட்டது. என்ன என்று தெரிந்து கொள்ளவே வந்தேன்,” என்றான் மாறு வேடத்து மன்னன்.

“ஐயா, என் மகள் படுத்த படுக்கையாய்க் கிடக்கிறாள். இந்த ஊர் மருத்துவரோ பணமில்லாமல் கை பார்க்க மாட்டார். எங்களிடம் பணம் இல்லை. நாளுக்கு நாள் அணு அனுவாகச் செத்துக் கொண்டிருக்கும் அவளைப் பார்க்கப் பார்க்க எனக்கு அழுகை அழுகையாக வருகிறது!” என்று கிழவி மீண்டும் அழத் தொடங்கி விட்டாள்.