பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



68 நல்வழிச் சிறுகதைககள்

ளோடுதானே படித்தாய். இதெல்லாம் உனக்கு எப்படி வந்தது ? தெய்வம் கனவில் வந்து கூறியதா ? இல்லை, அருள் வந்து பாடினாயா ?” என்று கேட்டார்கள்.

“நக்கீரர் முதலிய புலவர்களும் பாடி வைத்திருக்கிறார்களே, அவற்றைப் படிக்க முடிகிறதா ? நமது முத்துவடுகநாதன் கவிதைகள் எவ்வளவு எளிமையாகவும் வெள்ளையாகவும் இருக்கின்றன !” என்று. ஒரு நண்பன் கூறினான்.

“இது இயற்கையான கவிதை! எல்லோருக்கும் புரியும் கவிதை ! எளிதில் பொருள் விளங்கும். கவிதை !” என்று மற்றொருவன் கூறினான்.

“ஆயிரக் கணக்கில் கவிதைகளை எழுதிப் பாயில் சுருட்டி வைப்பதால் பயனில்லை. முத்து வடுகநாதா, உன் கவிதைகள் தமிழ்நாடு முழுவதும் பரவ வேண்டும். அவ்வாறு பரவினால், வேலம்பட்டிக்குப் பெருமை உண்டாகும். அதற்கு உன் கவிதைகளைச் சங்கத்திலே அரங்கேற்றம் செய்ய வேண்டும் !” என்றான் ஒரு நண்பன்.

சங்கத்திலே அரங்கேற்றம் செய்வதாயிருந்தால், புலவர்கள் பல கேள்விகள் கேட்பார்களாமே ! அவற்றிற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டுமே !” என்று சிறிது அஞ்சிய குரலில் கூறினான் முத்துவடுகநாதன்.

“அதற்கெல்லாம் பயந்தால் முடியுமா ? உன் கவிதை பொருள் விளங்காததாயிருந்தால் அல்லவா