பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70 நல்வழிச் சிறுகதைகள்

ஏடுகளைப் புரட்டிப் பார்த்துவிட்டு, மறுபடியும் கட்டி என்னிடமே திருப்பித் தந்தார். “இங்கேதான் கொடுக்கச் சொன்னார்கள். அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்து நாள் அறிவிக்கச் சொன்னார்கள் !” என்று நான் சொன்னேன். அவர் என்னை நோக்கி, ‘தம்பி, இவை இங்கே செல்லுபடியாகா !’ என்று கூறி என்னைத் திருப்பியனுப்பி விட்டார் !” என்று கூறினான் அந்த ஆள்.

இந்தச் செய்தியைக் கேட்ட முத்து வடுகநாதனுக்கு அவமானமாக இருந்தது. தன் நண்பர்கள் முகத்தில் விழிக்கவே வெட்கமாயிருந்தது.

ஒலைச் சுவடியை வாங்கிப் பார்த்து விட்டுத் திருப்பிக் கொடுத்த புலவர் யார்?” என்று கேட்டான். அதற்கு அந்த ஆள், “அவர் யார் என்று கேட்டுக் கொண்டு வரவில்லை” என்று கூறி விட்டான்.

நண்பர்கள் செய்தியறிந்த போது முத்து வடுகநாதன் எதிர்பார்த்தபடி கேலி பேசவில்லை. முத்து வடுகநாதனைக் காட்டிலும் அவர்கள் அதிமாக ஆத்திரப்பட்டார்கள். ஒலைக் கட்டைத் திருப்பியனுப்பிய புலவருக்குக் கவிதையுணர்வு இல்லாமலிருக்க வேண்டும் ; அல்லது, அவர் அகம்பாவம் பிடித்தவராக இருக்க வேண்டும் என்று கருதினார்கள்.

வேலம்பட்டியை யடுத்து அரசம்பட்டி என்று ஒரு சிற்றூர் இருந்தது. அரசம்பட்டியில் மங்லகங்கிழார் என்றொரு பெரும் புலவர் இருந்தார்.