பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6 நல்வழிச் சிறுகதைகள்


இரண்டு மாம்பழங்களும் ஒரே மாதிரியிருந்தன. அவற்றை முன்னிட்டுச் சண்டை வரவே காரணமில்லை. ஆனால், அரியநாதனும் வடுகநாதனும் சண்டையிடாமல் இருக்கவில்லை. அரசரிடமிருந்து மூன்றாவது கனியைக் கேட்டுப் போராடினர்.

பெற்ற பிள்ளைகள் கேட்கும்போது அதைக் கொடுக்க மாட்டேனென்று மறுக்க அரசருக்கு மனம் வரவில்லை. ஆனால், யாருக்குக் கொடுப்பதென்று அவரால் எளிதில் தீர்மானிக்கவும் முடியவில்லை.

ஆனால், யாருக்குக் கொடுப்பது என்பதை அந்தப் பிள்ளைகளே எளிதாக முடிவு கட்டி விட்டார்கள்.

இருவரும் வாட்போர் புரிவதென்றும், வெற்றி பெறுகிறவன் மாங்கனியைப் பெற்றுக் கொள்வ தென்றும் முடிவு கட்டினார்கள். எப்படியாவது பிரச்சினை தீர்ந்தால் போதும் என்று எண்ணிய அரசர், அவர்கள் முடிவிற்கு ஒப்புக் கொண்டார். அதுவே பெருங்கெடுதலாக முடிந்தது.

மாங்கணிக்காக வாட்போர்ப் போட்டியில் இறங்கிய இளவரசர்கள், அது வெறும் போட்டியென்பதை மறந்து, ஒருவரையொருவர் கொன்று ஒழிப்பது என்ற நோக்கத்தோடு வாள் சுழற்றத் தொடங்கி விட்டனர்.

போர் தொடங்கிய பிறகு அரசரால் அதைத்தடுத்து நிறுத்த முடியவில்லை. கடைசியில் அரியநாதன் படுகாயப்பட்டுப் போரில் தோற்றுக்