பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாரா. நாச்சியப்பன் ⚫ 79
 

ஒரு நாள் அந்த ஊர்க் கொல்லனுடைய கன்றுக் குட்டியைப் புலி கொன்று தின்று விட்டது. கொல்லன் மிகவும் துயரத்தோடு இருத்தான்.

அவன் துயரத்தைக் கண்ட பெரியதம்பி, “ஐயா! எனக்கு அனுமதி கொடுங்கள். நான் காட்டுக்குப் போய் அந்தப் புலியைக் கென்று வருகிறேன் !” என்றான்.

“நீயா?” என்று வியப்புடனும் அவநம்பிக்கையுடனும் கேட்டான், கொல்லன்.

“ஆம் ! நானேதான் ! எனக்கு ஒரு வேலும் உங்கள் அனுமதியும் ஆசியும் கிடைத்தால் போதும்!” என்று உறுதியான குரலில் கூறினான் பெரியதம்பி.

கொல்லன், அவன் நிமிர்ந்து நின்ற தோற்றத்தையும் கம்பீரமான பேச்சையும் கண்டான். சிறிது நம்பிக்கைதோன்றியது. “போய்வா!” என்று அனுமதி கொடுத்தான். “வெற்றியோடு திரும்பி வா” என்று ஆசி மொழி கூறினான். புதிதாக வடித்த ஒரு வேல் எடுத்துக் கொடுத்தான்.

பெரியதம்பி காட்டுக்குச் சென்றான். புவியிருக்கும் இடத்தைத் தேடினான். கடைசியில் ஒரு குகை வாசலில் அந்தப் புலி நிற்பதைக் கண்டான்.

மனித வாடை அடித்ததும், அந்தப் புலி பெரியதம்பி நின்ற பக்கம் திரும்பியது. அவன் மீது பாய