பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
82நல்வழிச் சிறுகதைகள்
 

அவன் புலியைக் கொன்று ஊரைக் காப்பாற்றியதற்காக ஊர் மக்கள் ஒரு விழாக் கொண்டாட ஏற்பாடு செய்தார்கள். பெரியதம்பியைக் குதிரையில் ஏற்றி வைத்து ஊர்வலம் வந்தார்கள். அவன் கழுத்தில் மலர் மாலைகளைக் கொண்டு வந்து போட்டார்கள்.

இவற்றையெல்லாம் சின்னத்தம்பி பார்த்தான். அருகில் நின்ற ஒருவனிடம், "ஊருக்குத் தொந்தரவு கொடுத்த எலிகளை நான் பிடித்துக் கொல்கிறேன். ஒரு நாளைக்குப் பத்துப் பன்னிரண்டு எலிகளைப் பிடித்து வருகிறேன். என்னைப் பாராட்டுவார் ஒருவர் கூடக் கிடையாது. பெரியதம்பி ஒரே ஒரு புலியைக் கொன்றதற்காக ஊரே திரண்டு விழாக் கொண்டாடுகிறார்கள் ! இது என்ன நியாயம் ?” என்று கேட்டான்.

அதற்கு அந்த மனிதன் பதில் சொன்னான் : எலியைக் கொல்வதில் வீரம் இல்லை. புலியைக் கொல்வதில் வீரம் இருக்கிறது. எளிய செயல் இலட்சம் புரிந்தாலும் பெருமையில்லை. அரிய செயல் ஒன்று செ ய்தாலும் பெருமையுண்டு தெரிந்து கொள்” என்றான்

இதைக் கேட்ட சின்னத்தம்பி வெட்கத்துடன் தலை குனிந்தான்.

கருத்துரை :- செய்தற்கு அரிய செயல்களைச் செய்வோரே பெரியோராகக் கொண்டாடப்படுவார்கள்