பக்கம்:நவநீதப் பாட்டியல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ரீ : நவநீதப்பா ட்டியல் முதல்மொழி யியல் 1.கார்கொண்ட மேனிக் கறைகொண்ட நேமிக் கமலக்கண்ணன் பார்கொண்ட பாதத்தை பேத்திப் பகருவன் பாட்டியலைத் தேர்கொண்ட அல்குற் றுடிகொண்ட சிற்றிடைச்செந்துவர்வாய் வார்கொண்ட பூண்முலை வேல்கொண்ட வாள்விழிவாணுதலே. பிரபந்தங்களினுடைய முதல்மொழிக் குரிய இலக்கணங் களை உணர்த்துவதால் இவ்வியல் முதல்மொழி யியல் என்று பெயர் பெறுவதாயிற்று.இயல் -நூற்பகுதி. வாணுதலே, கமலக்கண்ணன் பாதத்தை யேத்திப் பாட்டி யலைப் பகருவன். மேனி - நிறம் : கறை - பகைவரது இரத்தக்கறை; நேமி - சக்கரம்; பார் கொணட பாதம் - நிலத்தை அளந்த பாதம்; நிலததைத் திருமால் அளந்தது திருவிக்கிரமாவதாரத்தில்.பாட்டி யல் - பாட்டுப்பற்றிய இலக்கண நூல்: 'அணியியல்' என்பதுபோல. பாட்டு - பிரபந்தம்; வார் -கச்சு. இச்செய்யுளில் சொல்லப்பட்டன கடவுள் வணக்கமும், நூலிற் சொல்லப்படும் பொருளும். இவற்றை மயிலைநாதர் ஒரு சாரார் வேண்டும் சிறப்புப்பாயிரம் என்று கூறி 'வணக்க மதிகாரம் என் றிரண்டும் சொல்லச், சிறப்பென்னும் பாயிரமாம்' என்ற பழைய சூத்திரத்தையும் மேற்கோள் காட்டுவர். இச் செய்யுளில் கார் கொண்டை.... ஏத்தி' என்றது கடவுள் வணக்கம். பகருவன் பாட்டியலை' என்றது அதிகாரம். 'தேர்கொண்ட.. வாணுதலே என்றது மகடூஉ முன்னிலை. இந்நூல் யாப்பருங்கலக் காரிகைபோல மகடூஉ முன்னிலையாய்ப் பாடப் பெற்றது.