பக்கம்:நவநீதப் பாட்டியல்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 அவற்றுள், நவநீதப் பாட்டியல் நல்லவையென்பது நாடுங் காலை எத்துறை யானு மிருவரு மியம்பும் அத்துறை வல்லோர் அறனொடு புணர்ந்தோர் மெய்ப்பொருள் கண்டோர் மிக்கவை யோர்ப்போர் கற்றவர் கல்விக் கடாவிடை யறிவோர் செற்றமும் சினமும் சேரா மனத்தோர் முனிவொன் றில்லோர் மூர்க்க ரல்லோர் இனிய முகத்தோர் இருந்துரை கேட்போர் வேந்த னொருவற்குப் பாங்கு படினும் தாந்தா மொருவர்கட் பாங்கு படாதோர் அன்னோர் முன்னரக் கூறிய பொழுதில் தொலையு மாயினுந் தொலைவெனப் படாது வெல்லு மாயினு மிகச்சிறப் புடைத்தே. (யாப் - விருத். பக் 514-515) நிறையவை 87. பாங்கா யொருதிறம் பற்றா தவர்பல் கலைப்பொருளும் ஆங்கே யுணர்ந்தோர் அடக்க முடையார் அவரவர்கள் தாங்கா தலித்து மொழிவன கேட்போர் தருமநெறி நீங்காத நாவர் உறைந்தவக் கூட்டம் நிறையவையே. ஒரு பக்கம் சேராது நடுவுநிலையில் நிற்பவர் பலவகை யான கலைப்பொருள்களையும் உணர்ந்தவர், அடக்கம் உடையவர், ஒவ்வொருவரும் தாம்தாம் விரும்பிச் சொல்லுகின்றவற்றைக் கேட் பவர், தருமநெறியிலிருந்து நீங்காதவர், நாவன்மை படைத்தவர்: இத்தன்மையுடையார் இருக்கும் சபை நிறையவை என்ற எனப் படும். நிறையவை யென்பது நினையுங் காலை எல்லாப் பொருளுந் தன்னகத் தடக்கி எதிர்வரு மொழிகளை யெடுத்துரைப் பதுவே. 87.17 நாவல. 17.18 நால்வ ருரைத்தவை:. (யாப் - விருத், பக் 515)