பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

‘ஏன் சுவாமி தங்கள் பூலோக விஜயம்?'’ என்று குட்டிக் கலை விமரிசனப் பத்திரிகை ஒன்று பேட்டியில் கேட்ட கேள்வி இது.

‘தெய்வங்கள் எல்லாம் அண்ணாநகருக்கும் பெசண்டு நகருக்கும் குடி வந்து விட்டார்கள். அட்ட லட்சுமிகளும் அடையாறு வந்து சேர்ந்து விட்டார்கள். அங்கு எனக்கு ‘போர்’ அடித்தது ; வந்து விட்டேன்'’ என்றார்.

‘'கலகம் செய்வது உம் தொழிலாமே”

‘'தெய்வத்திலகங்கள் அப்படி நினைக்கிறார்கள். என் வாயிலிருந்து ஏதாவது வந்தால் அதை வைத்து அவர்கள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய முடியும். இப்பொழுது தெய்வப் பெண்கள் ரொம்பவும் முன்னேறி விட்டார்கள்’ கம்ப்யூட்டர் சைன்ஸ் அது இது என்று படிக்க ஆரம்பித்து விட்டார்கள். கணவனோடு சண்டை போடுவது தம் நிலைக்குத் தாழ்வு என்று கருதுகிறார்கள்; ஊடல் என்பது ‘வாடல் இருந்தால் தானே வரும்; அவர்கள் சின்ன சின்ன விஷயங்களில் ஈடுபடுவது இல்;ை அதனால் இப் பொழுது எனக்கு அங்கு வேலை இல்லாமல் போய் விட்டது” என்று சுருக்கமாகச் சொல்லி முடித்தார்.

‘பாரதப் பிரதமரைப் பார்க்க உத்தேசம் உண்டா ?”.