பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

நடிகையின் தாயார்

‘நீங்கள் யார்? ‘தாயார் ‘நடிகையின் தாய் யார்?’

‘நான் தான். அவளைப் பெற்றவர், வளர்த்தவர்; படிக்க வைத்தவர்; நடிக்க விட்டவள்.’

‘நடிப்பில் புகுத்தியதற்குக் காரணம்

‘அது ஒரு தொழில்; தொழில் செய்வது இந்தியப் பிரஜையின் அடிப்படை உரிமை’

‘அதுவல்ல. கலைத்துறைக்கு வந்த காரணம்’ ‘அழகாக இருந்ததுதான் ‘அது மட்டும்தான் காரணம் என்று சொல்ல முடி

யுமா?’

‘அதிகம் சிரிப்பாள் ; கொஞ்சம் வெட்கத்தைவிட்டுப் பழகக்கூடிய சுபாவம் உள்ளவள்; நாட்டியம் கற்றிருக் கிறாள்’

‘இது கவுரவமான தொழில் என்று தானே அனுப் பினீர்’

‘தொழிலில் கவுரவம் கிடைக்கும் என்றுதான்’ ‘ஆரப் பத்தில் தயக்கமாக இல்லையா?’ ‘எனக்கு இருந்தது; அவளுக்கு இல்லை ‘

‘இந்தக் காலத்தில் நடிகைகள் பேட்டியில் பணத் துக்குத்தான் நடிக்கிறோம்; எந்தப் பாத்திரமானாலும் கவலையில்லை என்கிறார்களே'