பக்கம்:நாகப்பட்டினம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 நாகபட்டினம்

இவ்வூர்ப் புலவர் காப்பியனார் என்பவர். காப்பியாற்றுக் காப்பியனார் என்று பெயர் பெற்றார். இவருக்கு'முன்னரும் சில காப்பியனார் வாழ்ந்திருப்பர். அவருள்ளும் தொன்மையான காப்பியர் தொல்காப்பியர் ஆவார். அவரே,

"தன் பெயர் தோற்றித் தொல்காப்பிய"த்தைப் படைத்தவர்.

"நாகரியர்" என்னும் சொல்லில் நாகர் முந்தி நிற்கின்றனர். நாகர் கைக்கொண்டு வளர்த்த செப்பமான படைப்புகளும் பண்பாடுகளும் மரபுகளும் நாகரிகம் ஆகியது. -

இவ்வகையில் நாகர்பட்டினமாம் நாகை - நாகரால் பெயர் பெற்ற நாகை - நாகரிகப் படைப்புத் தொடர்பு கொண்டதாகிறது.

அடுத்து சிந்தாற்றங்கரை' என்பது ஒரு வகையில் நயமாகவும், மறுவகையில் உண்மையாகவும் நாகையுடன் பொருந்துகிறது.

வடபுலத்துச் சிந்தாற்றங்கரையில் அகழ்ந்து காணப்பெற்ற மெகஞ்சதாரோ ஆரப்பா என்னும் இடங்கள் மிகத் தொன்மையான நாகரித்தவை என்பர். அவை தொன்மைத் திராவிடர் வாழ்ந்ததும், எழுப்பியதும், படைத்ததுமான இடங்கள் என்பது } }öü ஆய்வாளர்களது கருத்து. இவ்வகையில் திராவிடர் தொடர்பில் நாகை நகரம் ஒரு தொடர்பு கொள்கிறது. -

நாகையில் ஒரு சிந்தாறு

மற்றொரு உண்மைத் தொடர்பு உண்டு. நாகை ஒரு காலத்தில் ஆற்றங்கரை நகரமாக உருவெடுத்ததாகும். அந்த ஆறும் சிந்து ஆறு என்றே பெயர் கொண்டது. இதற்குப் பெரும் சான்றுகள் கண் கூடாகக் கிடைக்கவில்லை. கிடைக்கவில்லை என்பதால் சான்று களோ, தடயங்களோ இல்லை என்பது முடிவாகாது. இதற்குரிய அகழ்வு ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இரண்டு துறைக் கோயில்கள்

நாகையில் நகரின் மையப் பகுதியிலிருந்து மேற்கு நகர் எல்லை யில் ஒரு பிள்ளையார் கோயில் சிந்தாற்றுத்துறைப் பிள்ளையார் கோயில் என்று இன்றும் வழங்கப்பெறுகிறது. இதுபோல் நகரின் மையப் பகுதியிலிருந்து கிழக்கில் நாகை கடற்கரைக்கு 75மீட்டர் ள்ளே சிந்தாற்றுத்துறை மாதா கோயில் என்று ஒரு கிறித்துவர் யில் உள்ளது. எனவே, நகரின் மேற்கிலிருந்து கிழக்காக ஒர் து நகரின் மையத்தில் ஒடிப் பாய்ந்திருந்தது என்று அறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/144&oldid=585026" இலிருந்து மீள்விக்கப்பட்டது