பக்கம்:நாகப்பட்டினம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 நாகப்ட்டினம்

சமய விளக்கம்

சமயம் என்பதற்குச் சொல் அளவிலன்றிப் பொருள் அளவிலும், நடைமுறை அளவிலும் - அறிஞர் பலர் விளக்கம் தந்துள்ளனர். உளவியலாரும் மாந்தவியலாரும் சமயம் ஆதிக்குடிகளின் மந்திர முறையிலிருந்து எழுந்தது என்றும் தொன்மை மாந்தரின் அச்ச உணர்வாலும், குற்ற உணர்வாலும் நேர்ந்தது என்றும் கூறினர்.

20ஆம் நூற்றாண்டில் உளவியல் அறிஞர்க்கு முன்னோடியான சிக்மண்டு பிராய்டு என்பார், -

"மாந்தரின் மிக இன்றியமையாத இயல்பு பால் உணர்ச்சி. இதன் உந்துதலுக்குத் தடைகள் நேரும்போது, தடைக்குத் தக்கபடி மேற்கொள்ளும் ஒழுக்கமே சமயம்" என்றார். இவர் சமயத்தைக் கடவுளோடு தொடர்புபடுத்தவில்லை.

சமயம் என்பதற்கு ஒப்பாகச் சொல்லப்படும் ஆங்கிலச் சொல் 'Religion என்பதற்கு இருபொருள்களைக் கூறுவர். ஒன்று "குறிசொல்வது:அஃதாவது கடவுளின் திருவுள்ளத்தை அறியச் சில நிகழ்ச்சிகளை அடையாளங்களாகக் கொள்வது"; மற்றொன்று "இறைவனுடன் ஒன்று படுவது."

இவை அனைத்திலும் பெரிதும் பொருந்துவதும் சிறந்ததும் தமிழ் விளக்கமே, "கடவுள் உணர்வுத் தொடர்பில் பக்குவப்படுத்த மாந்தனால் அமைக்கப்பட்டது சமயம் என்பதே.

மதம் -

'மதம் என்னும் சொல்லும் சமயத்தின் மாற்றுச் சொல்லாக வழங்கப்படுகிறது. மதம் என்னும் சொல் கொள்கை என்பதால் அது பல்வகைக் கொள்கைகளையும் குறிக்கும். இலக்கணநூலோ, நூலாசிரியன் கைக்கொள்ளும் கொள்கைகளைக் குறிக்கிறது.

"எழுவகை மதமே உடன்படல் மறுத்தல்...." (3) என்று ஏழாகக் காட்டும்,

மதம் என்பதன் மற்றொரு பொருள் யானையின் திமிர்க் கொழுப்பால் கசியும் மதநீர் - அதனால் கொள்ளும் மதவெறி என்பது. இதுபோல் மதத்திமிர் பிடித்த மாந்தர் பெருகியதால் வள்ளலார் இராமலிங்கர் "மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/232&oldid=585113" இலிருந்து மீள்விக்கப்பட்டது