பக்கம்:நாகப்பட்டினம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 - நாகபட்டினம்

மூலச் சைவத்தில் புகுத்தப்பெற்ற கோட்பாடுகளும், வழிபாடுகளும், விழாக்களும், கூறப்பட்ட பயன்களும் மிகக் கவர்ச்சியூட்டுவனவாக இருந்தன. நலம் பல எளிதில் கிடைக்கும் என்னும் அவாவைத் தூண்டின. உருத்திரன் என்னும் அச்சமூட்டும் உருவினன்: மண்டை ஒட்டினைக் கொண்டவன் என்பவை அச்சமூட்டும் வகையில் அமைந்தவை அன்றோ அவாவும் அச்சமும் மக்களைப் பணிய வைத்தன; ஆட்பட வைத்தன.

திருவள்ளுவரோ கீழ்மக்களுக்கு ஒழுக்கம் உண்டு என்றால் ஒன்று அச்சத்தால், அன்றி அவாவால்' என்றது இவ்வகைக்கும் அமைவதாயிற்று. இவ்வாறு ஆட்பட்டாலும் தமிழ் மக்கள் திருநீறு பூசும் சைவராக இருந்தனர். சைவம் மக்கள் சமயமாக விளக்கம் பெற்றது. - . காணுமிடமெல்லாம் கோயில்கள்

நாகையில் சிவன் கோயில்கள் பெருகின. பட்டியலிட்டால்,

1. പെർധക്കേസിൽ எனப்பெறும் நாகைக் காரோணம், 2. மேலைக் காயாரோகணம், 3. சட்டையப்பர் கோயில், 4. நடுவர் கோயில், 5. அழகர் கோயில், 6. கட்டியப்பர் கோயில், 7. நாகநாதர் கோயில், 8. மலையீசர் கோயில், 9. விசுவநாத வீரபத்திரர் கோயில், 10. அமரேந்திரேசர் கோயில், 11. முத்தி மண்டபம் விசுவநாதர் கோயில், 12. அகத்தீசுரர் கோயில் (வெளிவை), 13. கார்முகேசர் கோயில், 14. மெய்கண்ட வேலவன் என்னும் குமரன் கோயில், 15. நாகூரில் புன்னாகவனப்பர் கோயில், 15. சொக்கநாதர் கோயில் எனக் காணலாம்.

தெரு ஒன்று, பிள்ளையார் நான்கு

பிள்ளையார் கோயில்கள் மட்டும் 26 உள்ளன. ஒரே தெருவில் 4 பிள்ளையார் அமர்ந்துள்ளனர். நால்வரும் நான்கு திக்கில் முகம் வைத்துள்ளனர். நீலா தெற்கு வீதியில் கிழக்கு நோக்கி ஆண்டான் பிள்ளையார்; தெற்கு நோக்கி அம்பட்டன் பிள்ளையார்; மேற்கு நோக்கிப் பெருநாட்டுப் பிள்ளையார்: வடக்கு நோக்கி (நாட்டு மேனிலைப் பள்ளிக்குள்) வித்தியா பிள்ளையார். இஃதொரு

1. "அச்சமே கீழ்கள தாசாரம்; எச்சம்

அவாவுண்டேல் உண்டாம் சிறிது" - திரு. 1015

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/252&oldid=585133" இலிருந்து மீள்விக்கப்பட்டது