பக்கம்:நாகப்பட்டினம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை 241

மாடநெடுவிதி நாகை, வங்கங்கள் கரையார் நாகை" என்றெல்லாம் காட்டியுள்ளார். நாகைப் பெருமக்களை, "அடியார் விதியால் வழி படுபவர், வழிபாடு பிரியாது எழுந்தொண்டர், ஞானத்துறைவல்லார் நாளும் பணிந்தேத்த நல்லார் அறஞ் சொல்வர், பொல்லார் புறங் கூறுவர், அல்லார் அலர் தூற்றுவர், அடியார்க்கருள் செய்வார்" என் றெல்லாம் பாடி இறையன்புடையவராய், கற்றவராய், வழிபாடு குறையாதவராய்க் காட்டியுள்ளார்.

இவர்தம் பதிகம் ஒவ்வொன்றும் பதினொன்றாவது பாடல் ஒவ்வொன்றைக் கொண்டது. இதில் "தமிழ்ஞான சம்பந்தன்" என்று தம்பெயரை நாட்டித் தம் "தமிழ் மாலை" பாடுபவர் நலம் பெறுவர் என்று நிறைவேற்றுவார். இது "கடைகாப்பு" எனப்பெறும். இத் தன்முத்திரைப் பாடல்கள் இருபதிகங்களிலும் உள்ளன. ஓயாத ஒட்டாரம்

திருநாவலூரர் எனப்பெறும் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய ஒரே பதிகத்தில் கடைகாப்புப் பாடலுடன் 11 பாடல்கள் உள்ளன. "கொல்லிக் கெளவாணம்" என்னும் பண்ணில் அமைந்தது இது. இவர் "தம்பிரான் தோழர்" எனப்பெறும் உரிமையைச் சிவபெருமா னிடம் பெற்றவர். இவர் பாடல்கள் அவ்வாறு நெருக்கம் காட்டுவன அவ்வப்போது வாழ்க்கைக்கு வேண்டிய மனைவி முதல் அடுத்தவள் தொடங்கி அணிகலன்கள், செல்வம் வரை அடிக்கடி வேண்டிப் பெறுபவர். சிவனிடம் ஒட்டாரம் பிடிப்பவர்; சிவனைப் பகடியாகவும் பாடியவர். இவற்றையெல்லாம் இப்பதிகத்திலும் காண லாம். சற்று மிகையாகவே பாடியுள்ளார்.

இறைவனையே, "பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்", "சேவேறித் திரிவீர்", "செல்வத்தை மறைத்து வைத்தீர்". "பாம்பினொடு படர்சடைகள் அவை காட்டி வெருட்டிப் பகட்டுகிறீர்" (14) - என்றெல்லாம் பகடியாடியுள்ளார். இவர் ஒரு மேனி மெருகர். வாழ்

வின்பத்தில் திளைப்பவர். இவற்றிற்கேற்ப இறைவனிடமே பல வற்றை வேண்டிப் பெறுபவர். நாகைக்கு வந்தவர் உடுத்திக் கொள்ளப் பட்டும், மார்பின் குறுக்கே போடும் பட்டிகையும்

চিrে.17.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/259&oldid=585140" இலிருந்து மீள்விக்கப்பட்டது