பக்கம்:நாகப்பட்டினம்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 நாகபட்டினம்

টক" தொப்பி வருவோர் தலைமீது ஏறிக்கொள்ளும். எனவே, இவ்வகையில் இது தலையாய தொழில். 9. பயிர்த்தொழில்

நாகையின் கிழக்கே மீன் விளையும் வயல், உப்பின் மூலவயல். சுற்றிலும் பயிர் வயல்கள் உள்ளன.

தென்மேற்கில் தொடங்கி மேற்கு வடமேற்கில் உள்ள நிலங்களில் பயிர்த்தொழில் நிகழ்கிறது. சுற்றியுள்ள சிற்றுார்கள் அனைத்தும் பயிர்த்தொழில் களங்களே. நாகைக்கு மட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் உணவு வழங்கும் பணியில் இப்பயிர்த்தொழில் திகழ்கிறது. இப்பயிர் நெற்பயிர் நன்செய்த் தொழில்; புன்செய் பயிர் இல்லை எனலாம்.

ஆனால் புன்செய் பயிரில் தோட்டப் பயிர்த்தொழில் தெற்கிலும், வடக்கிலும் திகழ்கிறது. தெற்கில் பொய்கை நல்லூர் முதலாக வேட்டைக்காரன் இருப்புவரை காய்கறிகள் தோட்டப்பயிர்கள்.

பொய்கைநல்லூர்க் கத்தரிக்காய் சுவையானது. மக்களால் விரும்பி வாங்கப்படுகிறது. மாமர வளர்ப்பும் மாங்காய் விளைச் சலும் குறிப்பிடத்தக்கவை.

வடக்கில் பால்பண்ணைச் சேரியில் தோட்டப்பயிராக மலர்கள் மணக்கின்றன. முல்லை, மல்லிகைப் பூந்தோட்டங்கள் மிகுதி யாகவும், பிற அளவாகவும் உள்ளன. இதனையும் ஒரு குறிப்பிடத் தக்க நாகைத் தொழில் எனலாம். மலரும் தொழில் எனலாம்: மணக்கும் தொழில் எனலாம். - மணத்தில் குறிப்பிடமுடியாத கடல் தொழிலில் துவங்கும் மீன் தொழில் நாகை மணத்தில் சிறக்கும் முல்லையில் நிறைவு பெறுகிறது.

எதிர்காலம் நாகையைப் பெருந்தொழில் நகரமாக்க நிலத்தடி எண்ணெயையும் நிலத்தடி எரிவாயுவையும் (Gas) நம்பியுள்ளது. 10. புகை வண்டித் தொழிற்சாலை -

ஆங்கிலர் ஆட்சியின் நலமாக நாகை புகைவண்டிப் போக்கு வரத்தைப் பெற்றது. இத்துறைக்குரிய இரும்புத் தொடர்பான பொருள்களையும் பிறவற்றையும் உருவாக்கும் இரும்புப் பட்டறை என்னும் தொழிற்சாலை, சற்றுப் பெரும் அளவில் நாகையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/342&oldid=585223" இலிருந்து மீள்விக்கப்பட்டது