பக்கம்:நாகப்பட்டினம்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றவர் பயிலும் நாகை 355

நிலைப்பள்ளிகள் ஒன்பதும் இருபாலார்க்கும் உள்ளன. அரசின் தொழில் நுட்பப் பள்ளி இயங்கி இப்போது செயற்பாட்டை எதிர்பார்த்துக் கொண்டுள்ளது.

முதன் முதலில் நாகையில் 1817இல் ஒரு கிறித்துவத் தொடக்கப்பள்ளி துவங்கப்பெற்றது. இதுதான் முதல் ஆங்கிலம் கற்பிக்கப் பெற்ற பள்ளி. இது 1823 இல் வெசுலிமிசன் உயர் நிலைப் பள்ளியாயிற்று. அதுதான் இப்போது தென்னிந்தியத் திருச் சபை மேனிலைப் பள்ளியாக வளர்ந்துள்ளது. இதன் பழைய கட்டடத்தின் வடபகுதியில் மேலே குறிக்கப்பட்ட ஆண்டுகளின் குறிப்புகள் கல்வெட்டுக்களாக உள்ளன.

வலிவலம் தேசிகர் என்னும் பெருமகனார் தம் உடைமை கொண்டு உருவாக்கிய வலிவலம் தேசிகர் பலமுனைத் தொழிற்கல்லூரி தோன்றி நூற்றுக்கணக்கானவர்க்குத் தொழில் வாழ்வு தந்து வருகின்றது. அதன் இணைப்பாக, தருமாம்பாள் பலமுனைத் தொழில் நுட்பக் கல்லூரி உள்ளது. முதன்மைக் கல்லூரி

அ. துரைசாமி மரகதவல்லியம்மாள் (அ.து.ம) மகளிர் கல்லூரி பெருவணிகச் செம்மல் திரு. அ.து. செயவீரபாண்டிய நாடாரால் தோற்றுவிக்கப்பெற்றுப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப் பாக முதன் நிலையில் வளர்ந்து வருகிறது. தம் வணிக உழைப்பில் உடைமையில் ஏற்காட்டுப் பண்ணையை அறக்கட்டளையாக்கியும் நிகழ்த்தும் வணிகச் செல்வங் கொண்டும் அண்ணாச்சி அவர்கள் இத்துடன் ஒரு மேனிலைப்பள்ளி நடுநிலைப்பள்ளி, உயர் தொடக்கப்பள்ளி, முதலியவற்றில் கல்வி அறச் சூழலை ஆக்கியுள்ளார்.

தம் உரிமை உடைமையாகக் கருதாமல் நகரத்துப் பெரு மக்களைக் கொண்டு குழு அமைத்து இயக்குவது அவர்தம் பரந்த மனப்பாங்கின் சான்றாகிறது. -

இதன் செயலாளராக நிலக்கிழார் திரு பார்த்தசாரதி நாயுடு என்னும் சீனிவாச நாயுடு அவர்கள் தொடர்ந்து அமைந்து தம் முதுமையிலும் இளைஞராய்ச் செயல்படுகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/373&oldid=585255" இலிருந்து மீள்விக்கப்பட்டது