பக்கம்:நாகப்பட்டினம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர் பெற்ற நாகை 49

இந்தப் பாம்பு என்று சொல்லும் நிலை ஒரு கொள்கையாகவே வட மொழியாளரால் வைத்துக் கொள்ளப்பட்டது. பிற மதங்களை அழிக்கவும் வேறு இனத்தவரைத் தாழ்வாக்கவும் முனைப்புடன் செயற்பட்ட ஆரிய வழியினர் நாகர் - பாம்பு என்னும் இதனைப் பரவலாகவே பரப்பினர்; உருவங்களும் அமைத்தனர். விளக்கங் களும் தந்தனர். கதைகள் கட்டினர்.

இச்செயல் நம் நாகர்பட்டினம் பெயரையும் தீண்டியது. நாகரைப் பாம்பு என்றும் அதற்குரிய வடமொழியாகிய உரகம் என்பதை வைத்து மாற்றியும் பட்டினத்தைப் புரி என்னும் வடசொல்லால் மாற்றியும் உரகடரி (11) என்று பெயர் குறித்தனர். அகரமுதலி களிலும் புராணங்களிலும் (12) எழுதினர். ஆயினும் வழக்கில் நாகர்பட்டினம் - நாகபட்டினம் என்று தன் பெயர் பெற்றதில் நிலைத்தது. பாம்புக் கோயில்

இந்தப் போக்கில் நாகையில் நாகநாதர் கோயில் ஒன்றும் எழுப்பப்பட்டது. இன்றும் உள்ள இக்கோயிலில் இரண்டு பாம்புகள் பின்னிப் புணர்ந்து நிற்கும் வடிவம் மூலவராகவும் உள்ளது. அத்துடன் அவ்வுருவ மூலவரும் உள்ளார். ஆனால் அங்கு வழிபடுவ தாக அமர்ந்துள்ள நாகராசன் மாந்தனாகவே உள்ளான். அவன் தலை மீது ஐந்து தலை நாகம் படம் விரித்துள்ளது. குறிப்பிடத்தக்க மற்றொரு பெண் சிற்பமும் அமர்ந்த தோற்றத்தில் உள்ளது. மாந்தர் கால்களே இதற்கு உள்ளன. இது அழகிய கன்னிப் பெண்ணின் வடிவம். இதில் ஒரு புதுமை இவ்வடிவத்தில் மூன்று கொங்கைகள் வடிக்கப்பெற்றுள்ளன. இவ்வமைப்பை ஓர் உள்ளிட்டுக் கருத்தின் சின்னமாகக் கொள்ள வேண்டும். பின்னர் இதை அறியலாம். முன்னர் இந்நூல் தொடக்கத்தில் குறிக்கப்பட்டமை போன்று இக்கோயிலில் கல்லால் உருவாக்கப்பெற்றுள்ள புற்றில் நாளும் முட்டையை உடைத்து ஊற்றுகின்றனர். நாகப்பாம்பு என்னும் கடவுளுக்குப் படைக்கும் உணவுக் காணிக்கையாகச் செய்யப்பட் டுள்ளது.

இவ்வாறு பாம்புக் கோயில் எழுப்புவது சிதறலாக ஆங்காங்கும் மரத்தடிகளில் பரவலாகவும் நிகழ்ந்துள்ளது. இந்திய நாட்டின் தென்கோடியில் உள்ள ஒரூர் நாகர்கோயில். இப்பெயர், நாகர் - பாம்பு கோயில் என்று காட்ட அமைக்கப்பட்டது. இவ்வூரின்

fちrT.5。

"می

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/67&oldid=584949" இலிருந்து மீள்விக்கப்பட்டது