பக்கம்:நாகப்பட்டினம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர் பெற்ற நாகை 57

நாகர் கூட்டுறவால் - தமிழரை மணந்த உறவால் ஒரு புதுக் குலமே தோன்றியது. "ஒய்மா நாட்டு நல்லியக்கோடன் என்பான் ஒவியர் குடியினன். ஒவியர் குடி என்பது நாகர் குடியில் ஒரு வகுப்பு" என்பார் உ.வே.சா. அவர்கள் (20).

நெடுமுடிக்கிள்ளி நாகநாட்டு இளவரசி பீலிவளைபால் பெற்ற மகன் இளந்திரையன் நாகர் வழியினன். அவன் நாட்டு அடையாள மாக அவன் கையில் சுற்றப்பட்ட தொண்டைக் கொடியால் அவன் தொண்டைமான் எனப்பட்டதும், அவன் வழியினர் தொண்டையர் எனப்பட்டதும், அவ்வழி தொண்டை நாடு என்றாகித் தமிழ்ப்பகுதி நாடே அமைந்ததும் நாகரை மூலமாகக் கொண்டதன் அறிகுறியே யாகும்.

இவ்வாறெல்லாம் நாகர் என்னும் சொல்லை வைத்து அனைத்தும் நாகநாட்டார் வழி அல்லது தாக்கம் என்று கூறலாமா? முழுமையாகப் பொருந்துமா இவ்வாறு ஐய வினாக்கள் எழுந்தால் தவறில்லை. வேண்டப்படும் வினாக்களுமாகும்.

ஊ. நாகர் தமிழ்ச் சொல் "நாகர்' என்னும் சொல் தமிழிலும் உண்டு. வடமொழியிலும் உண்டு. அவ்வவ்மொழியின் சூழ்நிலைகளுக்கேற்பப் பொருள் வேறுபாடு கொள்ளும், வடமொழியில் பாம்பு. ஒலி, கருங்குரங்கு, யானை, வானம், விடு பேற்று உலகம், மேகம் என்னும் பொருள் களைத் தரும்.

தமிழில் மலை, சுரபுன்னை (புன்னாசம்) சங்கு, குறிஞ்சிப் பண்வகை, காரீயம் என்னும் பொருள்களைத் தரும்.

தமிழ்ச் சொல்லுக்கு வேர் அடிநிலை. ந-நா-நகம்-நகு என்பவை. நாகு இளமைப் பொருள் தரும். ஆனால் அஃறிணைப் பெண்பால் இளமையைக் குறிக்கும் (21). இவ்விளமையில் சங்கைக் குறிப்பது (22) இங்கு கருதத்தக்கது.

சிறப்பாக மலை, சங்கு என்னும் பொருள்களைக் கொண்டு சிறுசிறு மலைகள் செறிந்தமையாலும், சங்குப் பெயர்கள் சூட்டப் பட்டமையாலும் நாகர்தம் நாட்டைக்குறிக்கும். இவ்வகையில் நாகர் என்னும் இதனைத் தமிழ்ச் சொல் எனலாம். உலக முதற் குடியாகத் தோன்றிய தமிழர் பல்லிடத்தும் பரவி வாழ்ந்தமை ஓர் ஆழ்ந்த உண்மையாகையால் கிழக்குத் தீவுகளில் தொன்மைத் தமிழர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/75&oldid=584957" இலிருந்து மீள்விக்கப்பட்டது