பக்கம்:நாகப்பட்டினம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர் பெற்ற நாகை - 59

"சுந்தர ட்ாண்டியன் என்னும் தமிழ் மன்னன் நாகர் குலப் பெண்ணை மணந்தான். அதனால் இவன் சுந்தரநாகன் - சுந்தர பாண்டிய நாகன் எனப்பெற்றான்"

என்று மார்க்கபோலோ தம் குறிப்பில் எழுதியுள்ளார். நாகர் கன்னியரை மணந்த செயல் அரசராலோ மற்றவராலோ செய்து கொள்ளப்படும் இயல்பான தொடர்புத் திருமணம் என்பதன்று. நாகர் கன்னியர்பால் இருந்த ஒரு தனித்தன்மையே யாகும். என்ன அந்தத் தனித்தன்ணிை

நாகர் கன்னியர் உடலுறவாம் இன்பத்தை நல்குவதில் அதற்குரிய உறுப்பமைப்புகளைச் சிறப்பாகக் கொண்டிருந்ததும், என்றும் கட்டிளமை மாறாமல் இருந்ததுமாகும்.

நாகர்பட்டினத்தில் உள்ள நாகநாதர் கோயிலில் ஒரு நாக கன்னிகையின் சிற்பம் இருப்பது பற்றி முன்னர் குறிக்கப்பட்டது. அவளுக்கு இயல்புக்கு மேலாக மூன்று கொங்கைகள் உள்ளன. இதனைச் சிற்றின்ப ஊற்றத்திற்குரிய சிறப்பமைப்பாகக் கொள்ள வேண்டும்.

மலையத்துவசன் என்னும் பாண்டிய மன்னனுக்குப் பிறந்த பெண்ணிற்கு மூன்று கொங்கைகள் இருந்ததும், எந்த ஆணைக் கண்டு நாணுகின்றாளோ அப்போது மூன்றாவது மறையும் என்றும் அல்வாறே இமயத்தில் சிவபெருமானைக் கண்டபோது மறைய, சிவனை மதுரையில் மணந்து நீண்ட புணர்ச்சி கொண்டாள் என்ற கதையும் இங்கு நோக்கத்தக்கது.

உடலுறவுப் புணர்ச்சிக்கு ஊற்றமளிப்பதில் மகளிரின் கொங்கை பெரும்பங்கு வகிப்பதை

"முலையிரண்டும் இல்லாதாள்பெண் காமுற்றற்று" (2.5) என்னும் திருக்குறளாலும் குறிப்பாக அறிகிறோம். கலிங்கத்துப் பரணி போன்ற இலக்கியங்களிலும், கந்த புராணத்திலும் இதனை அறியலாம். வடமொழியில் உள்ள காமசூத்திரம் தமிழில் வந்துள்ள கொக்கோகம் முதலியன விரிவாகவே இக்கருத்தைத் தருகின்றன. பாம்புப் புணர்ச்சி

புணர்ச்சி இன்பத்தின் நிறைவிற்குச் சொல்லப்படும் பல உவமைகளில் சிலப்பதிகார வெண்பா காட்டும் உவமை இங்கு காணத்தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/77&oldid=584959" இலிருந்து மீள்விக்கப்பட்டது