பக்கம்:நாடகக் கலை 1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுரை அண்ணு சண்முகம் அவர்கள் அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவே அரிய நூலாகு விரிவாகி நாடகக்கல” என்ற தலைப்பில் வெளியிடப்பெற்றது. இந்நூல் பட்டப்படிப்பு மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படும் என்பதை அறிந்து சென்னைப் பல்கலைக்கழகத் தார் துணைப்பாடமாக வைத்தார்கள். * மாணவர்கள் மத்தியில் இந்நூலுக்குப் பேராதரவு கிடைத்தது. அதனல் மதுரை காமராஜர் பல்கலைக் கழகமும் பட்டப்படிப்புக்கு - அஞ்சல்வழிக் கல்விக்காக துணைப்பாடமாக வைத்திருக்கிருர்கள். மதுரையம்பதி, அண்ணுச்சி அவர்களுக்குப் பலவகையிலும் சிறப்பு நல்கிய மாநகரம். அத்தகைய மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் தில் அன்னரது நூல் துணைப்பாடமாகத் திகழ வழி வ்கை செய்த துணைவேந்தருக்கும் ஆட்சிமன்றத்_குழுவினருக்கும் என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் என் விருப்பத்தையும் வேண்டுகோளாகத் தெரிவித்துக் கொள்கிறேன். அதாவது அஞ்சல்வழிப் படிப்புக்கு மட்டுமல்லாமல் முழுநேரப் படிப்புக்கும் இந் நூலைத் துணைப்பாடமாக வைக்க வேண்டுமென என் ப்ெரு விழைவைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும், கட்டுரைகள், வானெலிப்பேச்சு, ஆகியவை களின் சிறப்புத் தொகுப்பாக நாடக சிந்தனைகள்’ என்ற ஒர் அரிய நூலும் வெளிவந்துள்ளது. இதனைப் பள்ளி யிறுதித் தேர்வுக்குத் துணைப்பாடமாக வைத்தர்ல் மாணவர் களின் நுண்கலை அறிவு வளர்ச்சிக்கு, பள்ளிப்பருவத்திலேயே பெரும் துணையாக அமையும். அத்துடன் மறைந்த கலைஞர் அண்ணுச்சி அவர்களுக்கு சிறப்புமிக்க அஞ்சலி செலுத்தியது மாகும. எனவே, இதற்குக் கல்வித்துறை ஆவன செய்து தவ வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். அண்ணுச்சி அவர்களுடைய நூல் ஒவ்வொன்றும் நாடக அனுபவமுத்திரைகள் வாய்ந்த சிறப்புமிக்கது. அந்த வகையில் இந்த நாடகக் கலை' என்ற நூலும் பயன்மிக்கது என்பதை நான்காவது பதிப்பாக மலர்வதிலிருந்தே நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. அண்ணுச்சி அவர்கள் வளர்த்த நாடகக்கலை நாளும் வாழ்க! வளர்க! 'அவ்வையகம்’ சென்னை-600 086 } . க. பகவதி. 23–1–1981 தி த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/10&oldid=1322539" இலிருந்து மீள்விக்கப்பட்டது