பக்கம்:நாடகக் கலை 1.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத்தில் பிரசாரம் 167 நன்மைக்காக வளருவதே கலை "மனிதனுக்கு அறிவிருக்கிறது. அதை நல்ல வழி யிலும் திருப்பலாம்; கெட்ட வழியிலும் திருப்பலாம். கல்லதைவிடத் தீயதைத்தான் மனித மனம் விரைவில் ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது என ஒர் அறிஞர் கூறுகிருர். ஆகவே, பொழுதுபோக்கு என்ற பெயரால் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் மக்களின் நலன் கருதியே வளர வேண்டும். இறுதியாக ஒன்று கூறுகிறேன். அரசியல் கருத்து களும் விஞ்ஞான உண்மைகளும் வளர்ந்து வரு கின்றன. மனிதன் சந்திர மண்டலத்தை எட்டிப் பார்க்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிருன். உண்மை தான். மனித மனம் மிகப் பெரிதாக விரிவடைந்திருக் கிறது. அறிவு வானை அளந்துவிட்டது. ஆல்ை, இதயம் மட்டும் விரிவடையவில்லை; சுருங்கிக் கொண்டே போகிறது. அன்பு, அறம் இவற்றையெல்லாம் கமது இதயம் ஏற்க மறுக்கிறது. அன்பினுலும் அறத்திலுைம், இவற்றையெல்லாம் விட மேலாக அருளிலுைம் மனித இதயம் வளர்ந்து பண்படாவிட்டால், வளம் பெரு விட்டால், மனிதன் மனிதனுக வாழமுடியாது என்பதை உறுதியாகச் சொல்லுவேன். அறிவியல் வளர்ச்சி யாலும் விஞ்ஞான வளர்ச்சியாலும் மனிதன் கண்ட உண்மைகளை மனித குலத்திற்குப் பயன்படுத்தி, அன்பும், அறிவும், அருளும், அவன் இதயத்தில்ே இடம் பெறவேண்டும். எந்தச் சமயமாகிருந்தாம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/157&oldid=1322703" இலிருந்து மீள்விக்கப்பட்டது