பக்கம்:நாடகக் கலை 1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நாடகக் கலை திருமதி. பாலாமணி அம்மையார் டம்பாச்சாரி காட கத்தை கடித்தபோது நான் புதுவையில் 1922-ல் பார்த்திருக்கிறேன். காலஞ் சென்ற நகைச்சுவை கடிகர் திரு. சி. எஸ். சாமண்ணு ஐயர் டம்பாச்சாரி நாடகத்தில் பதினுெரு வேடங்கள் தாங்கி அற்புதமாக கடிப்பார். அப்போது கான் சிறுவன் என்ருலும் கன்ருக கினை விருக்கிறது. டம்பாச்சாரி நாடகம் எழுதப்பட்ட பிறகு 1877-ல் பிரதாப சந்திர விலாசம் என்னும் ஒரு நாடகம் எழுதப் பெற்றது. இந்த ங்ாடகத்தை எழுதியவர் திரு. ராமசாமி ராஜா என்பவர். இதுவும் டம்பாச்சாரி நாடக அமைப்பைப் பின்பற்றியே எழுதப்பட்டது. இந்த பிரதாப சந்திரன் நாடகத்தை காங்கள் எங்கள் குழுவில் 1926-ல் பல முறை கடித்திருக்கிருேம். நானே பிரதாப சந்திரனுகவும், சில நாடகங்களில் விசுவாச காதகன் என்ற தீயோனுகவும் கடித்திருக்கிறேன். இந்தக் காலத்தையொட்டி சத்தியபாஷா அரிச்சந்திர விலாசம் என்னும் நாடகத்தை பெங்களுர் திரு. அப்பாவுப் பிள்ளை என்பவர் எழுதியிருக்கிருர். இதுவரை அரிச்சந்திர நாடகத்தில் எந்த நாடக மேடையிலும், தெருக்கூத்து மேடையிலும் இவரது பாடல்களே பாடப்பெற்று வரு கின்றன. குறவஞ்சிநாடகம் குறவஞ்சி நாடகம் என்னும் ஒருவகை நாடகம் தமிழ் நாட்டியக் கலைஞர்களிடையே வளர்ந்து வந்தது. இந்தக் கதை, ஓர் அரசன் அல்லது தெய்வம் பவனி வரும்போது அவரைக் கண்ட ஒரு பெண்மணி காதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/34&oldid=1322565" இலிருந்து மீள்விக்கப்பட்டது